குவைத்தில் தமிழர் மரணம்;மகனை கண்டுபிடிக்க முடியாமல் குடும்பத்தினர் தவிப்பு அதிகமான பகிர்வு செய்து உதவுங்கள்:
குவைத்தில் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இந்திய தமிழகத்தைச் சேர்ந்த சொந்தரியபாண்டி(வயது-50) என்பவர் மரணமடைந்தார்.இவர் ராமநாதபுரம்,மாவட்டம் செவ்வூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 28/07/19(ஞாயிற்றுக்கிழமை) அன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு குவைத்தின் Amiri மருத்துவமனையில் தீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் எவ்வளவு முயற்சி செய்து அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் 03/08/19(சனிக்கிழமை) இரவு 11 மணியளவில் மரணமடைந்தார்.
இவர் வருகிற அக்டோபர் 1,2019 விடுமுறைக்கு தாயகம் செல்ல பயணச்சீட்டு வரையில் எடுத்தார் என்ற துயரமான செய்தியும் வெளியாகியுள்ளது.இந்நிலையில் இந்த சோகமான நிகழ்வு நடந்துள்ளது.

இவருடைய மகன் அருண் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக சென்னைக்கு சென்றார்.அதன் பின்னர் அவர் இதுவரையில் ஒருமுறைகூட ஊருக்கு வந்ததில்லை.அருண் இஞ்சினியரிங் முடித்த நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் எந்த தொடர்பும் இல்லை கடந்த பல வருடங்களாக பல்வேறு வழிகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.இந்த கவலை சொந்தரியபாண்டி கடுமையாக பாதித்தது என்று அவருடைய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
அவருடைய உடல் இன்று இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு செல்கிறது. அங்கிருந்து அவருடைய உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படுகிறது. அவருடைய இறுதி சடங்குகளை செய்வதற்காவது அருண் வரமாட்டார் என்று குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
எனவே இந்த செய்தி அருணின் பார்வையில் படும்படி அதிகமான பகிர்வு செய்து உதவுங்கள்.இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள அருணின் புகைப்படம் 5 வருடங்களுக்கு முன்னர் உள்ளது.சில நேரத்தில் அவருடைய உருவத்தில் மாற்றங்கள் வந்திருக்கலாம்.
Reporting by Kuwait tamil pasanga Team.