குவைத்தில் இந்தியாவைச் சேர்ந்த பெண்குழந்தை தன்னுடைய குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையத்தில் மீட்பு:
குவைத்தில் அப்பாசியா என்பது இந்தியர்கள் அதிக அளவில் வசித்து பகுதியாகும்.
இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த பெண் குழந்தை ஒன்றின் தற்கொலை தொடர்பான செய்தியை இன்று காலையில் எங்கள் தளத்தில் பதிவு செய்தோம். அது குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா கேரளா செங்ஙன்னூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ், கிருஷ்ணபிரியா தம்பதிகள் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்கள்.
இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள், இதில் மூத்த குழந்தையின் பெயர் தீர்த்தா(வயது-9), அவர் சம்பவம் நடந்த நேற்று இரவு பெற்றோர்கள் வெளியே சென்ற நிலையில் தனியாக வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த குழந்தை அப்பாசியாவில் உள்ள United Indian School பயின்று வருகின்றார். குவைத்தில் ஆண்டு விடுமுறை முடிந்து பள்ளிக் கூடங்கள் திறக்க இன்னும் ஒரு சில தினங்களே மீதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வெளியே சென்ற பெற்றோர் திருநம்பி குடியிருப்புக்கு வந்து பார்த்தபோது தீர்த்தா தன்னுடைய அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் கிடைத்தது விரைந்து வந்து பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வை மேற்கொண்டனர். பின்னர் உடலை கைப்பற்றி போலிசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த மரணம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இது கொலையா அல்லது பெற்றோர்கள் எதாவது திட்டியதால் கவலையில் இந்தி துயரமான முடிவை எடுத்தாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை துவங்கியுள்ளது. மேலும் கடந்த வாரம் Mahaboula அலீதா என்ற இந்திய மாணவி இறந்த நிலையில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று இந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது.
Reporting by Kuwait tamil pasanga Team