குவைத் நண்பரின் கேள்வி...?? வருடத்தில் எத்தனை முறை மனைவி மற்றும் குழந்தைக்கு சுற்றுலா விசா
எடுக்க முடியும்.....
எடுக்க முடியும்.....
கேள்வி:
குவைத்தில் வேலை செய்யும் நண்பர் ஒருவரின் கேள்வி நான் மாதத்திற்கு 430 தினார் சம்பளம் வாங்கி வருகிறேன்... நான் வருடத்தில் எத்தனை முறை மனைவி மற்றும் குழந்தைக்கு சுற்றுலா
விசா(Visit Visa) எடுக்க முடியும்....??????
விசா(Visit Visa) எடுக்க முடியும்....??????
பதில்:
தற்போது( இன்று காலை) வரையில் நடைமுறையில் உள்ள விசா சட்டத்தின் கீழ் நீங்கள் மனைவி மற்றும் குழந்தைக்கு ஒருமுறை விசா எடுத்து அவர்கள் குவைத்திற்கு வந்தால். அவர்கள் எந்த தேதியில் கடைசியாக குவைத்திலிருந்து தாயகம் திருப்புகிறார்களோ அந்த தேதியிலிருந்து 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அடுத்த சுற்றுலா விசா( Visit Visa) எடுக்க முடியும். ஆக ஒரு வருடத்தில் இரண்டு முறை இந்த விசா எடுக்க முடியும்.
மேலும் ஒரு Youtube தளம் பதிவு செய்துள்ள வீடியோவில் சாதாரணமாக ஒருவர் சுற்றுலா விசாவில் குவைத்தில் வந்தால் 3 மாதங்கள் வரையில் குவைத்தில் தங்க முடியும் என்று பதிவு செய்துள்ளது பார்க்க முடிந்தது அது முற்றிலும் தவறானது. 1 மாதங்கள் மட்டுமே தங்க முடியும் இதுதான் சட்டம்.
கணவர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைக்கு மட்டுமே 3 மாதங்கள் செல்லுபடியாகும் சுற்றுலா விசா எடுக்க முடியும், மற்ற இரத்த சொந்தங்கள் தனிப்பட்ட நபர் யார் வந்தாலும், அந்த விசாவின் காலாவதி 1 மாதம் மட்டுமே.
மேலும் வேலைக்காக வரும் நபர்களுக்கு வழங்கபடும் எந்தவொரு உள்நுழைவு விசாவும் 3 மாதங்கள் செல்லுபடியாகும் விதத்தில் இருக்கும். அந்த நபர் குவைத் வந்து இங்குள்ள மெடிக்கல் முடித்து தகுதி சான்றிதழ்கள் பெற்ற பிறகு மட்டுமே நிரந்தர விசா அடிப்பார்கள்( அதுவும் கம்பெனிகளை பொறுத்து ஒரு வருடமோ(அல்லது) இரண்டு வருடமோ அடிப்பார்கள்)
இதை தவிர குவைத்தில் உள்ள கம்பெனிகள் சில தொழிலாளர் சட்டத்தின் அடிப்படையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை சுற்றுலா
விசா(Visit Visa) எடுக்க முடியும்.....
விசா(Visit Visa) எடுக்க முடியும்.....
ShareAll......
Reporting by Kuwait tamil pasanga Team