குவைத்தில் அப்தலியில் இருந்து வந்து இருக்கிறேன் உதவுங்கள் தூதரகத்தில் அழுகை குரலுடன் தமிழகம் பட்டுக்கோட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் வருகை தந்தார் . இரண்டு வருடம் 8 மாதமாக வேலை பார்த்து வருகிறேன் எனவும். தன் தாயார் உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாக சொல்லி அழுத நிலையில் தான் தாயகம் செல்ல வேண்டும் என இலியாஸ் என்ற நண்பர் மூலம் தூதரகம் வந்துள்ளார்.
தூதரகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் தன் சூழ்நிலை கூறி கதறி அழுத நிலையில் பரிதாப நிலையை கண்ட தூதரக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மந்துப்புக்கு தொடர்பு கொண்டு தூதரகத்திற்கு அழைக்க இன்றே டிக்கெட் மற்றும் பாஸ்போர்ட்டுடன் வரவேண்டும் கறாராக சொல்ல பதறிய நிலையில் மூன்று மணி நேரத்தில் பாஸ்போர்ட் & டிக்கெட்டுடன் தூதரகம் வந்த அவர் தூதரக அதிகாரிகளிடம் அவைகளை கொடுத்து விட்டு சென்று விட்டார். சூழ்நிலை அறிந்து உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்த இந்திய தூதரகத்தின் செயல் பாராட்டுக்குரியதாகும். இந்த நிகழ்வு நேற்று 03.09.2019 நடந்தது.
இதையடுத்து வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்க குவைத் நிர்வாகிகள் நவ்ஷாத் மற்றும் குட்டி ராஜா ஆகியோர் விமான நிலையம் வரையில் பாதிக்கப்பட்ட நபரை அழைத்துச் சென்று இலங்கை விமானத்தில் தாயகம் அனுப்பி வைத்தனர். உடன் தூதரக தொடர்பாளர் ஒருவரும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட நபர் தூதரக அதிகாரிகளுக்கு இருகை கூப்பி கண்ணீர் மல்க நன்றி கூறி நமக்கும் நன்றி சொல்லி சென்றார்
Reporting by
அப்துர் ரஹ்மான், ஊடக செயலாளர்
வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கம்