BREAKING NEWS
latest

Sunday, September 29, 2019

ஓமனில் ஹிகா புயலில் சிக்கிய காணாமல் போன 5 தமிழர்கள் உட்பட 11 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது; 6 பேர் உடல்கள் மீட்பு:

ஓமனில் ஹிகா புயலில் சிக்கிய காணாமல் போன 5 தமிழர்கள் உட்பட 11 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது; 6 பேர் உடல்கள் மீட்பு:

ஓமன் கடல் பரப்பில் மையம் கொண்ட ஹிகா புயலில் சிக்கிய காணாமல் போன மீன்பிடி படகு விபத்தில் சிக்கியது என்று அந்நாட்டு கடலோர காவல் படை உறுதி செய்துள்ளது. இதில் சென்ற 5 தமிழர்கள் உட்பட 11 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இவர்கள் சென்ற மீன்பிடி படகின் பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 4 பேர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என்று மொத்தம் 5 தமிழர்கள் மற்றும்  மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள்  உட்பட 11 பேருடன் சென்ற மீன்பிடி படகு புயலால் விபத்தில் சிக்கியது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்கள் விபரம் பின்வருமாறு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியைச் சேர்ந்த   சிலுவை தாசன்(59) மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நம்புதலை சேர்ந்த  காசிலிங்கம்(35), கர்மேகாம்(50), ராமநாதன்(38), காசிலிங்கம்( 23) ஆகிய 5 பேர் ஆவார்கள்.

இதில் இவர்கள் சென்ற படகின் கேப்டன் என்று நம்பப்படும  தாசன்(59) கன்னியாகுமரி மாவட்டம் நபரின் உடல் உட்பட 6 பேர் உடல்கள் கண்டுபிடிக்கபட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன, மற்றவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சடலங்கள் மசிரா தீவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்கள் சென்ற படகு அப்துல்லா ஹமீது என்பவருக்குச் சொந்தமான என்றும், விபத்தில் சிக்கிய 11 பேரும் செப்டம்பர் 17 அன்று கடைசியாக மீன்பிடிக்கச் சென்றதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 Reporting by Kuwait tamil pasanga Team

Add your comments to ஓமனில் ஹிகா புயலில் சிக்கிய காணாமல் போன 5 தமிழர்கள் உட்பட 11 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது; 6 பேர் உடல்கள் மீட்பு:

« PREV
NEXT »