BREAKING NEWS
latest

Sunday, September 29, 2019

சவுதி அரேபியா இந்தியாவில் ரூ.7 லட்சம் கோடியை முதலீடு செய்கிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது

சவுதி அரேபியா இந்தியாவில் ரூ.7 லட்சம் கோடியை முதலீடு செய்கிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது 


சவுதி அரேபியாரூ.7 லட்சம் கோடியை இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கில் கொண்டு உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா 100 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் ரூ.7 லட்சம் கோடி) பெட்ரோகெமிக்கல்ஸ், ஆற்றல், சுத்திகரிப்பு, உள்கட்டமைப்பு, சுரங்கம், விவசாயம் போன்ற துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாக இந்தியாவிற்கான சவுதி அரேபிய தூதர் சவூத் பின் முகமது அல் சதி ((Saud bin Mohammed Al Sati )
தெரிவித்துள்ளார்.

சவுதியில் அராம்கோ, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து 44 மில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பது இருதரப்பு உறவின் முக்கிய மைல்கல்லாக உருவெடுத்துள்ளதாகவும், இந்தியா மற்றும் சவுதி இடையிலான வணிகத்தை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றுவது என்பதும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் 'விஷன் 2030' கொள்கையில் இடம்பெற்றுள்ளன இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவின் 17% கச்சா எண்ணெய் மற்றும் 32% எல்.பி.ஜி தேவைகளை சவுதி அரேபியாவே பூர்த்தி செய்கிறது. மேலும் 40க்கும் மேற்பட்ட வாய்ப்புள்ள துறைகளை கண்டறியப்பட்டு அதில் சவுதி அரேபியா முதலீடு செய்ய இருப்பதாகவும், வருங்காலங்களில் இந்த முதலீட்டுன் அளவு பெருமளவில் அதிகரிக்கப்படும் என்றும் முகமது அல்சடி கூறினார்.

வர்த்தக தடை காரணமாக ஈரானிடமிருந்து இந்தியா பெறும் கச்சா எண்ணெயின் அளவு குறைந்திருப்பதை சவுதி அரேபியா ஈடுகட்டுமா என்ற கேள்விக்கு நிச்சயமாக இது போன்ற பற்றாக்குறைகளை சமாளிக்க சவுதி அரேபியா கைகொடுக்கும் என்று உறுதிபட கூறினார்.

Add your comments to சவுதி அரேபியா இந்தியாவில் ரூ.7 லட்சம் கோடியை முதலீடு செய்கிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது

« PREV
NEXT »