துபாயில் ஷேக் முகமது பின் சயீத் சாலையில் இன்று அதிகாலையில் 04:50 மணியளவில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் என்றும் மற்றும் 6 பேர் பலத்த காயமடைந்தனர் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான முதல்கட்ட தகவல்களை பாதுகாப்பு துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த விபத்து ஷார்ஜா நோக்கி சாலையில்
மிர்டிஃப் சிட்டி சென்டருக்கு முன்பாக நடந்துள்ளது. ஒரு மினிபஸ் மற்றும் கனரக வாகனம் மோதிக்கொண்டன என்று துபாய் ஆம்புலன்ஸ் பிரிவும் உறுதி செய்துள்ளது.இது தொழிலாளர்கள் சென்ற வாகனம் என்று தெரியவந்துள்ளது. இதில் 14 பேர் பயணம் செய்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துபாய் காவல்துறை மற்றும் மருத்துவ குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரணமடைந்த மற்றும் உயிருக்கு போராடிய நபர்களை மீட்டு ரஷீத்(Rashid) மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக ஆம்புலன்ஸ் சேவைகளுக்கான துபாய் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநர் Khalifa bin Draiy தெரிவித்தார், மேலும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்கவும், சாலையில் கவனம் செலுத்தவும் அவர் கேட்டுக்கொண்டார்
இறந்த மற்றும் படுகாயமடைந்த தொழிலாளர்கள் அனைவருமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டவர்கள் என்ற சமூக ஆர்வலர் நசீர் வதனபள்ளி நேரில் சென்று பார்வையிட்ட பிறகு தெரிவித்துள்ளார்
Reporting by Kuwait tamil pasanga Team