BREAKING NEWS
latest

Friday, September 6, 2019

குவைத்தில் சிக்கித் தவிக்கும் மனைவியை மீட்க கணவர் வேண்டுகோள்; தவறான வழியில் பயன்படுத்த முயற்சிப்பதாக கதறல்:

குவைத்தில் சிக்கித் தவிக்கும் மனைவியை மீட்க கணவர் வேண்டுகோள்; தவறான வழியில் பயன்படுத்த முயற்சிப்பதாக கதறல்:


குவைத்தில் வேலைக்கு வந்து சிக்கித்தவிக்கும் தனது மனைவியை மீட்டுத்தரக்கோரி, கணவர், மகள்கள் மற்றும் மகனோடு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து மனு
அளித்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூரைச் சேர்ந்தவர் ராஜி(வயது-40), இவர் தனது இரு மகள்கள், மகனோடு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ளார், அதில் எனது மனைவி மங்கலட்சுமிக்கு கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் வெங்கடேசன், குமார், சங்கராபுரம் அண்ணாதுரை ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.

இவர்கள் எங்களுக்கு தெரியாமல், என் மனைவிக்கு விசா எடுத்து குவைத் நாட்டிற்கு வீட்டு வேலைக்கு அனுப்பி விட்டனர் எனவும், அங்கு சென்ற பின்பு எங்களை மொபைல் மூலம் தொடர்பு கொண்டு குவைத்தில் வேலைக்கு வந்துள்ளதாக தகவல் தெரிவித்தார் என்று கணவர் மனுவில் கூறியுள்ளார்.

மேலும், என் மனைவி குவைத் நாட்டிற்கு சென்று மூன்று மாதங்கள் முடிந்த நிலையில், கடந்த 29-ஆம் தேதி, சகோதரியின் கணவர் சுதாகரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, வீட்டு வேலைக்கு என அழைத்து வந்து, 25 பெண்களுக்கு மேல் அடைத்து வைத்து, தவறான தொழிலில் ஈடுபடுத்த போட்டோ எடுப்பதாகவும், மறுத்தால் துன்புறுத்துவதாகவும், காப்பாற்றும் படி கூறி கூறியுள்ளார்.

குவைத்தில் வேலைக்கு அனுப்பிய குமாரை தொடர்பு கொண்டு சகோதரியின் கணவர் சுதாகர் கேட்டதற்கு, 2 லட்சம் ரூபாய் பணம் தந்தால் தான் திரும்ப அனுப்ப முடியும் என கூறியுள்ளார். எனவே என் மனைவியை மீட்டுத்தர தமிழக அரசு மூலம் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இந்த பிரச்சினை குறித்த உண்மை நிலவரம் தெரிந்தால் உதவி செய்யப்படும். அவருடைய குடும்பத்தினரை தொடபு கொள்ள இந்த செய்தியை அதிகமான பகிர்வு செய்யவும். குடும்பத்தினர் தொடர்பு எண் கிடைக்கும் பட்சத்தில் எங்கள் தளத்தின் WhatsApp எண்  அல்லது Page inbox-க்கு அனுப்பி வையுங்கள். விழுப்புரம் நண்பர்கள் இதற்கு முயற்சி செய்யுங்கள், அதிகமாக பகிர்வு செய்யவும்.


Reporting by Kuwait tamil pasanga Team 

Add your comments to குவைத்தில் சிக்கித் தவிக்கும் மனைவியை மீட்க கணவர் வேண்டுகோள்; தவறான வழியில் பயன்படுத்த முயற்சிப்பதாக கதறல்:

« PREV
NEXT »