குவைத் வெப்பநிலை இன்னும் இரண்டு வாரங்களில் படிப்படியாக குறையும்
எனறு குவைத் வானிலை ஆய்வாளர் Adel Al-Saadoun அவர்கள் , குவைத் Al Rai தினசரி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் குவைத்தின் வழக்கமான கோடை காலம் செப்டம்பர் 23 அன்று முடிவடைந்தது, என்றும் அக்டோபர் மாதம் முதல் இரண்டு வாரங்கள் வரை வெப்பமாகவும், ஈரப்பதமாகவும் இருக்கும் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.
பத்திரிகையிடம் அவர் மேலும் கூறுகையில், குறிப்பாக திறந்த வெளிப் பகுதிகளில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு வெப்பம் தொடர்ந்து குறையும், பருவ மழையின் நேரத்தைப் பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட தேதியைப் பற்றி எதுவும் கூற முடியாது எனவும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.