BREAKING NEWS
latest

Friday, September 27, 2019

சவுதி ஜித்தா இந்திய தூதரகத்தில் கன்சுலேட் அதிகாரியாக டிசம்பரில் ஹம்னா மர்யம் பதவியேற்க உள்ளார்:


சவுதி ஜித்தா இந்திய தூதரகத்தில் கன்சுலேட் அதிகாரியாக டிசம்பரில் ஹம்னா மர்யம் பதவியேற்க உள்ளார்:


சவுதி ஜித்தாவில் உள்ள  இந்திய தூதரகத்தில் கன்சுலேட் அதிகாரியாக டிசம்பரில் பதவியேற்க உள்ளார் ஹம்னா மர்யம் என்ற கேரளாவை செர்ந்த பெண்மணி.

கேரளாவில் கோழிக்கோடு சேர்ந்த பிரபலமான குழந்தை மருத்துவர்களான டி.பி. அஷ்ரப் மற்றும் ஜவ்ஹறா தம்பதியர் மகள் ஹம்னா மர்யம் பள்ளிப்படிப்பு முழுவதும் கோழிக்கோட்டிலும், கல்லூரி படிப்பு டெல்லி பல்கலை கழகத்திலும் படித்த ஹம்னா கோழிக்கோடு ஃபரூக் கல்லூரியில் ஆங்கிலத்துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

இஞ்சினியரிங் படிப்பிலோ அல்லது பெற்றோரைப் போல மருத்துவர் ஆவதிலோ விருப்பம் இல்லாமல் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவது சிறு வயது முதலே ஹம்னாவின் கனவாக இருந்தது.
ஃபரூக் கல்லூரியில் பணியாற்றி வரும்போதே சிவில் சர்வீஸ் தேர்வெழுதிய ஹம்னா 2017-யில் 28-வது ரேங்குடன் தேர்ச்சி பெற்றார். 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த வெளியுறவுத்துறை பிரிவில் வேலையில் சேர்ந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
தற்போது பாரிஸ் இந்திய தூதரகத்தில் பணியாற்றி வரும் ஹம்னா பதவி உயர்வுடன் இட மாறுதலில் ஜித்தா இந்திய தூதரக கன்சுலேட் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் முஸம்மில்கான் தெலுங்கானா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பதில் உள்ள மொதீன் அக்பர் இடமாற்றம் பெற்று செல்வதால் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் துவக்கத்தில் ஹம்னா மர்யம் பதிவி ஏற்பார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

Reporting by Kuwait tamil pasanga Team

Add your comments to சவுதி ஜித்தா இந்திய தூதரகத்தில் கன்சுலேட் அதிகாரியாக டிசம்பரில் ஹம்னா மர்யம் பதவியேற்க உள்ளார்:

« PREV
NEXT »