துபாயில் இன்று நடந்த சாலை விபத்தில் இறந்தவர்கள் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது; முதலில் வெளியான செய்தி தவறானது:
துபாயில் ஷேக் முகமது பின் சயீத் சாலையில் இன்று அதிகாலையில் 04:50 மணியளவில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் என்றும் மற்றும் 6 பேர் பலத்த காயமடைந்தனர் என்று செய்தி பக்கத்தில் பதிவு செய்தோம். இந்த விபத்து ஷார்ஜா நோக்கி சாலையில் மிர்டிஃப் சிட்டி சென்டருக்கு முன்பாக நடந்துள்ளது. ஒரு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மினிபஸ் கனரக வாகனம் பின்புறத்தில் பயங்கரமான மோதி இந்த கோர விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் ஓட்டுநர் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.
காலையில் வெளியான முதல் அறிக்கையில் இறந்து 8 நபர்களில் 7 பேர் இந்தியர்கள் எனவும் மற்றொருவர் பாகிஸ்தான் நாட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில் அது குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. துபாய் மருத்துவமனை அறிக்கையை மேற்கோள்காட்டி காவல்துறை மாலையில் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட புதிய தகவலின்படி இறந்த 8 நபர்களில் 6 பேர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒருவர் இந்தியர் மற்றொருவர் பாகிஸ்தான் நாட்டவர் என்பதும். இறந்த பாகிஸ்தான் நபர் வாகனத்தின் ஓட்டுநர் என்பதும், இறந்த இந்தியர் தெலுங்கானா நபர் என்றும் தெரியவந்துள்ளது.
காயமடைந்த 6 நபர்களில் 5 பேர் இந்தியர்கள் மற்றொருவர் பங்களாதேஷ் நாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த 6 நபர்களில் 4 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளனர் என்றும், அதில் 3 பேர் தமிழர்கள் என்ற மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் 2 பேரின் காயங்கள் "மிதமானவை" என்று தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கிய அனைவரும் Security கம்பெனியில் வேலை செய்து வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில், காயமடைந்த தொழிலாளி ரஞ்சித் வர்மா, கால் முறிந்தவர் கூறுகையில் "எங்கள் ஷிப்ட் அதிகாலையில் ஆரம்பமாகிறது, அதிகாலை 4 மணிக்குள் பஸ்ஸில் ஏற நாங்கள் அதிகாலை 3.30 மணிக்கு எழுந்திருப்போம், அதிகாலை 5 மணிக்குள் எங்கள் இலக்கை அடைவதற்கு முன்பு அனைத்து தொழிலாளர்களும் பஸ்ஸில் தூங்குவது வாடிக்கையானது. டிரைவர் மட்டுமே ஒருவர் வழக்கமாக பஸ்ஸில் விழித்திருப்பார். அவர் தன்னை அறியாமல் தூங்கியிருக்க வேண்டும், "என்று குமார் என்ற நபர் கூறினார், குமார் இரண்டு ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரிந்து வருகிறார் என்றும் தெரிவித்தார்.
Reporting by Kuwait tamil pasanga Team