சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்த நபர், தனது வீட்டின் மொட்டை மாடியில் கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன
காரைக்குடி தந்தைபெரியார் தெருவைச்சேர்ந்தவர் மணிமுத்து. 51 வயதாகும் இவர் கத்தார் நாட்டில் வேலை பார்த்து, கடந்த 15 நாட்களுக்கு முன்னர் விடுமுறையை மகிழ்ச்சியான கழிக்க சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவருக்கு பூமதி என்ற மனைவியும், பிரவீனா (20), கமலக்கண்ணன் (19), சஞ்சய் அரவிந்த் (17) என மூன்று குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
28/09/2019 அன்று இரவு இவர் வீட்டின் மொட்டை மாடிக்கு தூங்கச்சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவி பூமதி அதிகாலை மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு மணிமுத்து கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியுற்றார்.இதுபற்றி தகவல் அறிந்த காரைக்குடி டி.எஸ். பி. அருண் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
மணிமுத்து சடலத்தை உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் மணிமுத்துவுக்கும் அவரது உறவினர்களுக்கும் பூர்விக சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரியவந்துள்ளது. இதில் கொலை செய்யப்பட்டாரா அல்லது, வேறு காரணமா என மும்முரமாக இந்த விஷயத்தில் இறங்கினார்கள். முதல் விசாரணையே மனைவி பூமதிதான்.
விசாரணை
ஏனென்றால், கணவர் இறந்த ஷாக், கண்ணீர் எதுவுமே அவர் முகத்தில் இல்லை. குடும்ப உறுப்பினர் ஒருவரது பெயரை சொல்லி, அவங்கதான் என் வீட்டுக்காரரை கொன்னுட்டாங்க என்று ஒப்புக்கு சொல்லிக் கொண்டே இருக்கவும், நம் போலீசாரின் சந்தேக கண் பூமதி மீது அதிகமாக விழுந்தது. இது சரிப்பட்டு வராது என்று, பூமதியை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று 'உரிய' முறையில் விசாரித்தனர். பிறகுதான், ராமேஸ்வரம் சாமியார் வேல்முருகன் என்பவர்தான் இதற்கெல்லாம் காரணம் என தெரியவந்தது.
சாமியார்
சாமியார் வேல்முருகன் பில்லி, சூனியம் எடுப்பதாக சொல்லிக் கொண்டு ஏமாற்று வேலை செய்பவராம். 15 வருஷமாகவே இப்படித்தானாம். கானாடுகாத்தான் அருகிலுள்ள கூட்டுக்கொல்லை எனும் கிராமத்திற்கு புதையல் எடுத்து தர வரும்போதுதான், மணிமுத்துவின் மனைவி பூமதிக்கும், சாமியாருக்கும் பழக்கம் தொத்தி கொண்டுள்ளது.
கள்ளக்காதல்
மணிமுத்து வெளிநாடு போகவும், இன்னும் இவர்களுக்கு கொண்டாட்டம் ஆகிவிட்டது. வருஷத்துக்கு ஒருமுறை மணிமுத்து ஊருக்கு வந்தாலும், இந்த கள்ளக்காதல் விவகாரம் தெரியாமலேயே இருந்திருக்கிறது. இதில் 5 வருஷமாக தொடர்ந்து மணிமுத்து ஊருக்கு வராத சூழல் ஏற்பட்டுவிட்டது. போன வாரம்தான் மணிமுத்து ஊருக்கு வரவும், விஷயத்தை பலர் வந்து சொல்லிவிட்டார்கள். இதனால் மனைவியை கூப்பிட்டு கண்டித்துள்ளார்.
நிர்வாண பூஜை
ஜாலியாக சுற்றி கொண்டிருந்த காதல் ஜோடிக்கு, கணவனின் கண்டிப்பும் உத்தரவும் பிடிக்கவில்லை. அதனால், கணவனின் கை, காலை உடைக்க சாமியாரிடம் சொன்னதே பூமதிதானாம். அதுக்காகத்தான் நாள் குறித்துள்ளார் சாமியார். அமாவாசை, நடுராத்திரி 1 மணிக்கு ராமநாதபுரம் அல்லிக்கண்மாயில் நிர்வாண பூஜை நடத்தி உள்ளார்.
கைது
பின்னர், கூட்டாளிகள் ராமநாதபுரம் பிரகாஷ், குமார் ஆகியோரை கூட்டிவந்து, விடிகாலை 3 மணியளவில் மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டிருந்த மணிமுத்துவை எல்லாருமே சேர்ந்து குத்திக் கொன்றிருக்கின்றனர். இதையடுத்து கூண்டோடு அனைவரும் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணையின் பிடியில் உள்ளனர். இதில் முக்கியமான விஷயம், சாமியார் நிர்வாண பூஜை செய்து 2 மணி நேரத்தில் இந்த கொலையை செய்தார் என்றால், ஆறே மணி நேரத்தில் சாமியார் & கோ-வை தூக்கிவிட்டனர் நம் போலீசார் என்பது குறிப்பிடத்தக்கது.