குவைத்தில் குடும்ப விசாவுக்கு 500 தினார் மாத சம்பளம் என்ற புதிய வரம்பை நிர்ணயித்து உத்தரவை இரண்டு வாரங்களுக்கு முன்பு குடியுரிமை துறை அமைச்சகம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் 500 தினார் மாத சம்பளம் இருந்தாலும் சிலருக்கு குடும்ப விசா பெற முடியாது என்று சம்மந்தப்பட்ட துறையை மேற்கொள் காட்டி புதிய செய்தியை குவைத்தின் சில பத்திரிகைகள் வெளியிட்டுள்ளது. இந்த புதிய நிபந்தனை அடிப்படையில் Marginal Profession,s தொழிலாளர்கள் மாத சம்பளம் 500 தினார் இருந்தாலும் அவர்கள் குடும்ப விசா பெற முடியாது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
குவைத்திலோ அல்லது பிற நாடுகளில் படிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் 18 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு பல்கலைக்கழகத்தின் சம்மந்தப்பட்ட சான்றிதழ்கள் சமர்ப்பித்தால் அவர்களுக்கு விசா புதுப்பித்தல் செய்து வழங்கபடும் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. இதுபோல் 12 வயது கடந்த வெளிநாட்டினர் குழந்தைகளுக்கு விசா புதுப்பித்தல் செய்து வழங்கப்பட மாட்டாது என்று வெளியாகியுள்ள செய்தியும் ஆதாரம் அற்றவை என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் விசிட்டிங் விசா பெறுவதற்கு குறைந்தபட்ச மாத சம்பளம் 250 தினார்கள் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் 200 தினார்கள் மாத சம்பளம் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அவர்கள் குடும்பத்தினரை அழைத்துவர விசிட்டிங் விசா வழங்கபடுவதா...)) வேண்டாமா...?? என்பதை அந்த மாகாணத்தில் சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் தீர்மானிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் குறிப்பிட்டுள்ள விசிட்டிங் விசா காலாவதி மனைவி மற்றும் குழந்தைக்கு 3 மாதங்களுக்கும், பெற்றோர்கள் மற்றும் சகோதரர்களுக்கு 1 மாதமும் வழங்கபடும்.இது எந்த காரணத்திற்காகவும் நீட்டிப்பு செய்யப்பட மாட்டாது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தின் பத்திரிகை செய்தியை மேற்கோள் காட்டி உங்கள்
Reporting by: Kuwait tamil pasanga Team