குவைத்தில் பொறியாளர் தகுதித்தேர்வு எழுதிய 4,809 தோல்வி; விசா புதுப்பித்தல் செய்து அனுமதி மறுப்பு:
(Image: Google source )
குவைத்தில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களில் இஞ்சினியரிங் பதவியில் உள்ள நபர்களுக்கு விசா புதுப்பித்தல் செய்ய Kuwait Society of Engineers துறை நடத்தும் தேர்வு மற்றும் சான்றிதழ் தகுதி பரிசோதனை ஆகிய இரண்டிலும் வெற்றி பெறவேண்டும் என்ற புதிய நிபந்தனை கடந்தவருடம் நடைமுறையில் கொண்டுவந்து.
இதையடுத்து விசா புதுப்பித்தல் (Work Permit) செய்ய நடத்தப்பட்ட தேர்வில் 4,809 தோல்வி அடைந்தனர் என்றும், இதனால் அவர்களுக்கு விசா புதுப்பித்தல் செய்து வழங்கவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தேர்வு எழுதிய 1591 பேர் தேர்ச்சி அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள்.
இதில் தோல்வியடைந்த நபர்கள் பொறியாளர் அல்லாத வேறு வேலைக்கு மாறுவது அல்லது தாயகம் திரும்புவது என்று இரண்டு வழிகள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகுதித்தேர்வில் எகிப்து மற்றும் இந்தியா உள்ளிட்ட சில நாட்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் வேலையை இழந்துள்ளனர் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.