சவுதியில் அறிவிக்கப்பட்ட புதிய சுற்றுலா விசா 49 நாடுகளைச் தவிர்த்து இந்தியா,இலங்கை உள்ளிட்ட பிற நாட்டவர்கள் பெறுவது எப்படி.....???
சவுதியில் அறிவிக்கப்பட்ட புதிய சுற்றுலா விசா அமெரிக்கா, சிங்கப்பூர்,மலேசியா உள்ளிட்ட 49 நாடுகளைச் சேர்ந்த குடிமகன் சவுதியின் அதிகாரபூர்வமாக விசா விண்ணப்பிக்கும் தளத்தில் ஆன்லைன் மூலம் தேவையான ஆவணங்கள் மற்றும் விசா கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு ஓரிரு நாட்களில் விசா நகல் தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பபடும் இதை பயன்படுத்தி பயணம் செய்யலாம்.
மேலும் சவுதி விமான நிலையத்தில் நுழைந்தவுடன் அங்கு நிறுவப்பட்டுள்ள ஆன்லைன் இயந்திரம் உங்கள் கூடுதல் தகவல்கள் மற்றும் கைரேகை பதிவு செய்து சில நிமிடங்களில் நடைமுறைகள் முடித்து சவுதியின் உள்ளே நுழைய முடியும்.ஆனால் இந்த புதிய சுற்றுலா விசாவை இந்தியா, இலங்கை உள்ளிட்ட பிற அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் பெற முடியும். ஆனால் எளிதாக ஆன்லைன் மூலம் பெற முடியாது. மாறாக விண்ணப்பிக்க வேண்டும்
1) நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அதன் பக்கத்தில் உள்ள சவுதி கவுன்சிலேட்டில்(தூதரகம்) சென்று தேவையான ஆவணங்களுடன், விசா கட்டணம் செலுத்தி விண்ணப்பம் பூர்த்தி செய்து வழங்கவேண்டும்.
2) உங்கள் பாஸ்போர்ட் குறைந்தது 6 மாதமாவது காலாவதி உடையதாக இருக்க வேண்டும். Sponsor தேவை இல்லை என்றாலும், Return Ticket, Hotel booking details, Bank statements, அடையாள அட்டை, Employment proof, உங்கள் முகவரி ஆகியவை இதனுடன் வழங்க வேண்டும்.
3) சவுதியின் அனுமதி பெற்ற இன்சூரன்ஸ் கம்பெனிகளில் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும், மேலும் 300 ரியால்( இந்திய ரூபாயின் மதிப்பில் 5652) கட்டணமும் செலுத்த வேண்டும். ஓரிரு நாட்களில் விசா உங்கள் முகவரியில் வந்து சேரும்.
4) 18 வயதிற்கு கீழே உள்ள நபர்களை தனியாக சவுதியில் இந்த சுற்றுலா விசா பயன்படுத்தி நுழைய அனுமதி வழங்கப்படமாட்டாது. இது போல் சுற்றுலா விசா பயன்படுத்தி மருத்துவ வசதிகள் பயன்படுத்தவும் அனுமதி கிடையாது( பலர் தவறாக பயன்படுத்துகிறார்கள்).
5) ஒரு முறை நுழைவு( Single Entry), பல முறை நுழைவு( Multiple Entry) என இரண்டு வகை விசா உள்ளது. ஒரு முறை நுழைவு 30 நாடுகளுக்கும், பலமுறை நுழைவு 3 மாதங்கள் அதிகபட்சமாக தங்க முடியும் விதத்திலும் இருக்கும்(இது ஒரு வருடம் காலாவதி உடையது). மீண்டும் சவுதியில் விட்டு வெளியே சென்று மீண்டும் இதே விசாவை பயன்படுத்தி, ஒரு வருட காலாவதி முடியும் முன்னர் மீண்டும் சவுதியில் வர முடியும் என்பது சிறப்பு.
6) சுற்றுலா வரும் நபர் விசா காலாவதி கடந்து சவுதியில் தங்கினால் நாள் ஒன்றுக்கு 100 ரியால் அபராதம் செலுத்த வேண்டும்.
7) மக்கா, மதினா ஆகிய இடங்களில் முஸ்லிம் அல்லாத பிற நுழைய அனுமதி கிடையாது. ஹஜ் நாட்களில் இந்த விசா பயன்படுத்தி முஸ்லிம் நபர்களும் உள்ளே நுழைய முடியாது. ஆனால் மற்ற காலங்களில் உம்ரா கடமைகளை இந்த விசா பயன்படுத்தி நிறைவேற்ற முடியும்.
9) சவுதி சட்டத்திற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையிலும் யாரையும் ஈடுபட ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் அடக்கமாக ஆடைகளை அணிய வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர் அதிகாரிகள். ஆனால் சுற்றுலா வரும் பெண்கள் பர்தா அணிய தேவை இல்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
10) சவுதி சுற்றுலா துறையின் இணையதளம் மூலம் பயணச்சீட்டு, விடுதிகள், உணவகங்கள் , கட்டண பயண வாகனங்கள் முன்பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே இந்தியர்கள் இந்தியாவில் உள்ள கவுன்சிலேட்டில்(தூதரகம்) மூலம் விசா பெற விண்ணப்பிக்க முடியும், வளைகுடா உள்ளவர்கள் உங்கள் பக்கத்தில் உள்ள சவுதி தூதரகத்தில் விண்ணப்பிக்கலாம். வரும் நாட்களில் இந்த நடைமுறை மாறி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி அறிவிக்கபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Reporting by kuwait tamil pasanga Team.