இந்தியர்கள் அதுவும் தமிழர்கள் அதிகம் வேலை செய்யும் மலேசியாவில் சுமார் 75, 000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் பெர்மிட்டுகளை குடிநுழைவு இலாகா துறை அதிகாரிகள் திடிரென ரத்து செய்துள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து 500 நிறுவனங்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றன .
நாட்டில் பல தொழில் துறைகளுக்கு அந்நிய தொழிலாளர்களை கொண்டு வரும் நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து முடக்கி வருகிறது . ஒரு சில தொழில் துறை களுக்கு அந்நிய தொழிலாளர்களை கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக - அத்துறைகளுக்கு மாற்று தொழி லாளர்களை கொண்டு வர அனுமதி உண்டு. ஆனால் அத்தொழிலாளர்களை கொண்டு வருவதற்கான விண்ணப்பங்களை பெறுவது தான் மிகவும் கடுமையாக உள்ளது. இதனால் பலருக்கு மாற்றுத் தொழிலாளர்கள் கிடைக்காமலேயே உள்ளது .
இந்தவொரு சூழ்நிலையில் தற்போது நாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அந்நிய தொழிலாளர்களின் பெர்மிட்டுகள் ரத்து செய்யப் பட்டுள்ளன. இதனால் அவர்கள் அனைவரும் தற்போது சட்ட விரோத தொழிலாளர்களாக நாட்டில் தங்கியுள்ளனர் என்று பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் சூர்யா மதியழகன் கூறினார் . கடந்த 2013-ஆம் ஆண்டு இத்தொழிலாளர்கள் அனைவரும் முறைப்படி லெவி கட்டணங்களை செலுத்தி நாட்டிற்குள் நுழைந்தனர் . இத்தொழிலாளர்கள் 10 ஆண்டுகளுக்கு இங்கு வேலை செய்யலாம். இதற்காக ஒவ்வோர் ஆண்டும் அத்தொழிலாளர்களின் பெர்மிட்டுகள் லெவி கட்டணத்துடன் புதுப்பிக் கப்பட வேண்டும் . மைஇஜியின் வாயிலாக சுமார் 6 ஆண்டுகளாக அத்தொழிலாளர்களின் பெர்மிட்கள் புதுப்பிக் கப்பட்டு வந்தன .
தற்போது 2019-20ஆம் ஆண்டுக்கான பெட் மிட்டுகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. சுமார் 1000 வெள்ளியில் இருந்து 2500 வெள்ளி வரை கட்டணம் செலுத்தி பெர்மிட்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. புதுப்பிக்கப்படும் அட்டை தொழிலாளர்களின் கையில் இருக்கும் நிலையில் மைஇஜியில் அத்தொழிலாளர்களின் பொமிட் டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என காட்டுகிறது . இவ்விவகாரம் குறித்து மைஇஜியில் விளக்கம் கேட்டால், இது குடிநுழைவு இலக்காவின் நடவடிக்கை எனக் கூறு கின்றனர்.குடிநுழைவு இலாகாவிற்கு சென்றால் எங்களுக்கு தெரியாது என கைவிரிக்கின்றனர். இது உள்துறை அமைச்சின் த நடவடிக்கையாக கூட இருக்கலாம் என ஒரு சில கூறுகின்றனர் .