ஞானசேகரன் மற்றும் ஓட்டுநர் சாஹிப் ரஹ்மான்
துபாயில் இரு தினங்களுக்கு முன்பு ( திங்கட்கிழமை) நடந்த சாலை விபத்தை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. சிறிய வேன் ஒன்று கனரக லாரியின் பின்புறத்தில் மோதி கோர விபத்தில் சிக்கியது,இதில் அந்த வாகனத்தில் மொத்தம் 14 பேர் பயணம் செய்தனர், அவர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் பலத்த காயமடைந்தனர் இவர்கள் குறித்த முழு விபரங்களை இந்தியா மற்றும் நேபாள தூதரகங்கள் தற்போது வெளியிட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய 14 நபர்களின் விபரம் பின்வருமாறு:
1) விபத்தில் இறந்த நேபாளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் விபரம்
- தன் பகதூர் சகதியால்
- நாராயண் பிரசாத் போக்ரெல்
- கிருஷ்ண பகதூர் புன் மாகர்
- ரமேஷ் சவுத்ரி
- நாயரம் சவுத்
- தீபக் பிஷோகர்மா.
(விபத்தில் இறந்த நேபாள நாட்டினர் அனைவரும் 30-35 வயதிற்கு உட்பட்டவர்கள் )
2) விபத்தில் இறந்த இந்தியர்(தமிழர்)
- ஞானசேகரன் போஸ்(24) தமிழகத்தைச் சேர்ந்தவர்.
உயிரிழந்த ஞானசேகரன் இந்திய தமிழகம்
ராமநாதபுரம் மாவட்டம், கடலடி தாலுகா, திருஅப்பனூர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
3) விபத்தில் இறந்த பாகிஸ்தான் நபர்( ஓட்டுநர்)
- சாஹிப் ரஹ்மான்(25)
மேலும் இந்த விபத்தில் சிக்கிய 6 பேர் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் மட்டுமே தற்போது ஐ.சி.யுவில் உள்ளார். காயமடைந்த 6 நபர்களில், 5 பேர் இந்தியர்கள் என துபாய் இந்திய துணை தூதரக அதிகாரி ஜித்தேந்தர் சிங் நேகி உறுதி செய்துள்ளனர்.
மற்றொரு நபர் வங்காளதேச நபர் என்றுசில செய்தி தளங்களுக்கும் மற்று சில தளங்கள் பாகிஸ்தான் நபர் என்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர் குறித்த கூடுதல் தெளிவான தகவல்கள் எதுவும் தெரியவில்லை.
அமீரகத்தின் சட்ட நடவடிக்கைகள் முடிந்து உடல்களை விரிவாக தாயகம் அனுப்பும் வேலைகளை தொழிலாளர்கள்வேலை செய்த கம்பெனி நிர்வாகம் செய்து வருகிறது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அபுதாபி நேபாள தூதரக அதிகாரி ரீட்டா தீதல் விளக்கமளித்துள்ளார்
Reporting by kuwait tamil pasanga Team.