BREAKING NEWS
latest

Thursday, October 24, 2019

குவைத்தில் தமிழர் மருத்துவமனையில் சிசிக்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் தமிழர் மருத்துவமனையில் சிசிக்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:


குவைத்தில் இந்திய தமிழகம் நாகை மாவட்டம், நாகூர் பங்களா தோட்டம்,4-வது குறுக்கு தெருவை சேர்ந்த ஹாஜா நஜ்முதீன் என்கிற சின்னபூரியான்(வயது-46). இவருடைய தந்தை பெயர் சாகுல் ஹமீது

கஹாஜா நஜ்முதீன் குவைத்தில் கடந்த சில வருடங்களாக  பாஹத்-அல்-அஹமது பகுதியில், வீடு ஒன்றில் சமையல் வேலை பார்த்து வந்தார், இந்நிலையில் திடிரென  மாரடைப்பால் Adan மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (24-10-2019) வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி  மரணமடைந்தார் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினர் அனுமதியுடன் குவைத் சட்ட நடவடிக்கைகள் முடித்து உடல் குவைத்திலேயே நல்லடக்கம் செய்யும் வேலைகளை மக்கள் சேவை மைய நிர்வாகம் செய்து வருகிறது என்று செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Reporting by kuwait tamil pasanga Team.


Add your comments to குவைத்தில் தமிழர் மருத்துவமனையில் சிசிக்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »