BREAKING NEWS
latest

Wednesday, October 23, 2019

சவுதியில் பொதுமன்னிப்பா....??? உண்மை நிலவரம் இதோ:

சவுதியில் பொதுமன்னிப்பு என்பது பொய்யான தகவல்; 
         பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் உதவுகிறது, மற்ற நாட்டவர்கள் ஏமாற வேண்டாம்:


உண்மைநிலவரம்:

பல்வேறு பிரச்சினைகளில் தவிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகத்தின் முயற்சி மூலம் நாள் ஒன்றுக்கு 20 பேர் வரையில் தாயகம் செல்ல உதவுகிறார்கள் இதுவே உண்மை.....

விரிவாக பார்ப்போம்:

சவுதியில் பொதுமன்னிப்பு என்று கடந்த இரண்டு நாட்களாக ஒரு செய்தி பல தளங்களில் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து சவுதியில் தவிக்கும் பல உறவுகள் அதை எங்கள் தளத்தின் WhatsApp எண்ணுக்கு அனுப்பி இதை உண்மை நிலவரம் குறித்து கேட்டனர். இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அதன் உண்மை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

சவுதியில் விசா( இக்கமா) காலாவதியாகி தவிக்கும் இந்தியர்களுக்கு, சவுதி இந்திய தூதரகத்தின் உதவியுடன் அபராதம் செலுத்தாமல் தாயகம் திரும்ப உதவிகள் செய்யப்படுகிறது. இதைதான் சிலர் திரித்து(தவறாக) பொதுமன்னிப்பு என்று பரப்பி வருகிறார்கள்.

முதலில் புரிந்து கொள்ளுங்கள் இந்திய தூதரகத்தில் புகார் செய்யும் நபர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும், சவுதியில் ரியாதில் உள்ள இந்திய தூதரகத்தின் Community Welfare Wing பிரிவின் முயற்சி மூலம் சவுதி அரசின் ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவும் முயற்சியாக இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இந்தியர்கள் முதலில் தூதரகத்தில்
 கம்மியூனிட்டி வெல்ஃபேர் விங் (Community Welfare Wing) அணுகி உங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்  அதாவது புகார் கொடுக்க வேண்டும், அங்கிருந்து கிடைக்கும் கடிதம் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றுடன், சவுதியின் ரியாதில் உள்ள தர்ஹீல் அதாவது நாடுகடத்தல் மையத்திற்கு அழைத்துச் சென்று எந்த குற்றப்பின்னணியும் இல்லாதிருந்தால் Exitpass அடித்து கொடுக்கபட்டு வருகிறது.

 அதுவும் இந்திய தூதரக அதிகாரி தெரிவிக்கும் நேரத்தில் மட்டுமே இங்கு செல்ல வேண்டும். அந்த நேரத்தில் செல்லும் நபர்களுக்கு  Final Exit கிடைக்கும், மேலும் இப்படி Final Exit கிடைக்கும் இந்தியர்கள் குறிப்பிட தேதிகள், நீங்களே பயணச்சீட்டு எடுத்து சவுதியில் இருந்து வெளியேற வேண்டும்.

நாள் ஒன்றுக்கு 20 பேர் என்ற விகிதத்தில் இந்த Final Exit வழங்கப்படுகிறது. நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வீட்டு வாகன ஓட்டுனர்கள் (House Driver), வீட்டு பணிப்பெண்கள் (House maid), கஃபீல் மூலம் புகார் (ஹுரூஃப்) செய்யப்பட்டவர்கள், இக்காமா காலாவதி ஆகியும் புதுப்பிக்க முடியாதவர்கள் மற்றும் இக்காமாவே வைத்திருக்காதவர்கள், ஆகிய அனைவருக்கும் இந்த உதவி கிடைக்கும். பாஸ்போர்ட் இல்லாத இந்தியர்கள் Outpass- க்கு இந்திய தூதரகத்தில் விண்ணப்பிக்க சொன்னால் இதை செய்யுங்கள்.

அதாவது ஈஸி அவுட் பாஸ் அல்லது ஒயிட் பாஸ் விண்ணப்பிக்க வேண்டும் என்று சொன்னால் கீழ் கொடுக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

1. ஈஸி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும்

2. அவசர கால சான்றிதழ் அவுட் பாஸ் அல்லது ஒயிட் பாஸ் விண்ணப்ப படிவங்களை இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

3. பாஸ்போர்ட் நகல் (முதல் மற்றும் கடைசி பக்கம்)

4. புகைப்படம் இரண்டு ஒயிட் பேக்கிரவுண்ட்

5. இக்காமா நகல் / விசா ஸ்டாம்பிங் நகல் (இவை இருந்தால் இணைப்பது நல்லது, கட்டாயம் இல்லை)

6. கட்டணம் ஏதும் வசூலிக்கபடமாட்டாது

7. விண்ணப்பம் அளித்த 5 முதல் 7 நாட்களில் ஈஸி பாஸ் கிடைக்கும்

8. பாஸ்போர்ட் காலவதி ஆகியிருந்தால் ஈஸி பாஸ் தேவை இல்லை

9. ஈஸி பாஸ் கிடைக்க பெற்றவர்களுக்கு பாஸ்போர்ட் ரத்து ஆகிவிடும்.  (இந்தியா சென்ற பின் புதிய பாஸ்ப்போர்ட்டிற்கு விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம்)

மேலும் இது தொடர்பான சந்தேங்கள் மற்றும் உதவிகளுக்கு இந்தியா தூதரங்கள் மற்றும் துணை தூதரங்களை தொடர்பு கொள்ளவும்.

இந்தியா தூதரங்கள் ரியாத் மற்றும் ஜித்தா பணி நேரங்கள் :

காலை 9:00 முதல் மாலை 5:30 வரை (Sunday to Thursday).

Riyadh Address :

B-1 Diplomatic Quarter, PO Box 94387, Riyadh 11693, Saudi Arabia, Tel No : 011-4884144 / 488469. Fax No : 011 4884750.

Jeddah Address :

Building of Mr. Mansoor Abdul Rahman Al Hueesb, Villa No 34, Behind national commercial bank, Near Al Huda Mosque, Tahlia Street, Jeddah. Tel : 012-2614093. Fax No : 012-2840238.

சவுதி இந்திய தூதரகம் மற்றும் அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கூறுகையில் கண்டிப்பாக இது பொதுமன்னிப்பு அல்ல, மனிதாபிமான அடிப்படையில்  பாதிக்கப்பட்டு தவிக்கும்  இந்தியர்களுக்கு  உதவுவதற்கு எடுக்கப்பட்டுள்ள புதிய முயற்சியே.

Reporting by Kuwait tamil pasanga Team

Add your comments to சவுதியில் பொதுமன்னிப்பா....??? உண்மை நிலவரம் இதோ:

« PREV
NEXT »