குவைத்தில் சுற்றுலா மற்றும் குடும்ப விசாவில் வருபவர்கள், தொழில் விசவாக மாற்றிக் கொள்ள முடியும் கூடுதல் தகவல்கள்:
குவைத்தில் குடும்ப விசா அல்லது சுற்றுலா விசாக்களில் வந்துள்ள மற்றும் வருபவர்கள், அதை ரெசிடென்ஸ் விசாவாக(Work Visa) மாற்றி கொள்ள முடியும், என்று துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் அல்-ஜர்ரா அல்-சபா நேற்று அக்டோபர் 22 (செவ்வாயன்று) புதிய அறிவிப்பை வெளியிட்டார் என்று குவைத் செய்தித்தாள்கள் மற்றும் தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
குவைத்தில் விசிட் விசாவில் உள்ள நபர்கள் மற்றும் வருபவர்கள் 30 நாட்களுக்குள் உங்கள் கல்வி தகுதிக்கு அடிப்படையில் வேலையை கண்டுபிடிக்க வேண்டும். வேலை கிடைத்தால் குவைத்தில் மருத்துவ பரிசோதனை அனைத்தும் முடித்து 30 நாட்களுக்குள் தங்கள் சுற்றுலா விசாவை ரெசிடென்ஸ்( தொழில்) விசாவாக மாற்ற வேண்டும்.
இந்த சட்டம் எத்தனை நாட்கள் வரையில் நடைமுறையில் இருக்கும் என்பது குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் தெரியவில்லை. முடிந்தவரையில் இந்த புதிய அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஏனெனில் குவைத்தில் தற்போது செவிலியர்கள் தேர்வு நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களுக்கு விசாமாற்றம் எளிதாக செய்யவே இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கலாம் என்று தெரிகிறது. எதுவாக இருந்தாலும் இது குவைத்தில் வேலை தேடும் மற்ற உறவுகளும் பயனுள்ள அறிவிப்பு ஆகும்.
சாதாரணமாக யாராவது குவைத்தில் குடும்ப விசா அல்லது சுற்றுலா விசாக்களில் வந்தால் எதாவது வேலை கிடைத்தாலும், திரும்பி தாயகம் சென்று மருத்துவ பரிசோதனை மற்றும் PCC சான்றிதழ் ஆகியவை சரிசெய்து மீண்டும் புதிய விசாவில் குவைத்தில் வேலைக்கு வரவேண்டும் அதைவிட இது எளிதாக இருக்கும்.
இதுபோல் தொழில் விசாவில் குவைத்திற்கு வந்து பல்வேறு காரணங்களால் Permanent விசா அடிக்க முடியாமல் தாயகம் திரும்பி நபர்கள் ஒரு மாதத்திற்குள் குவைத்தில் சுற்றுலா விசாவில் வந்தால் அவர்களுக்கும் தொழில் விசாவுக்கு மாறுவதற்கு வாய்ப்பு இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
எதுவாக இருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஆனால் இதற்கு PCC சான்றிதழ் தேவைபடும் என்று தெரிகிறது. இந்த புதிய நடைமுறை பயன்படுத்தி விசா பெறுவதற்கு முயற்சி செய்யவும் நண்பர்கள் கூடுதல் தகவல்களில் தெளிவு பெறவும். மேலும் மருத்துவ பரிசோதனையில் நீங்கள் தேர்வு பெற்றால் மட்டுமே இந்த விசா பெறுவதற்கு நீங்கள் தகுதியானவர் என்பது மறந்துவிட வேண்டாம்.
இதில் உங்களுக்கு தெரிந்த கூடுதல் தகவல்களை Pageயின் Comments அடைப்பில் பதிவு செய்யவும். மேலும் குவைத்தில் உள்ள செய்திகளில் வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படையில் இந்த பதிவு.
Reporting by Kuwait tamil pasanga Team
Reporting by Kuwait tamil pasanga Team