BREAKING NEWS
latest

Thursday, November 7, 2019

குவைத்தில் இந்திய தூதரகத்தின் முயற்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் கடந்த 6 வருடங்களாக தாயகம் செல்ல முடியாமல் பரிதவித்த தமிழர் தாயகம் திரும்பினார்:

குவைத்தில் இந்திய தூதரகத்தின் முயற்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் கடந்த 6 வருடங்களாக தாயகம் செல்ல முடியாமல் பரிதவித்த தமிழர் தாயகம் திரும்பினார்:


இந்திய தமிழகம் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே ரெங்கநாதபுரத்தை சேர்ந்த செங்கோல் என்பவரது மகன் யேசுராஜ்( வயது-32) திருமணமாகி மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர், கடந்த 2014ல் நண்பர் ஒருவர் மூலம் குவைத்தில் டிரைவர் வேலைக்கு சென்றார். இந்நிலையில் தனது வாகனம் விபத்தில் சிக்கிய வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால் தாயகம் செல்ல முடியாமல் பரிதவித்து வந்துள்ளார்.

கடந்த 26/05/2019 அன்று இத்தகவலை குவைத் இந்திய தூதரகத்தில் பதிவு செய்தார். அதன் பிறகு ஜேசுராஜூக்கு என்று குவைத் இந்திய தூதரகம் வழக்கறிஞர் ஒருவரை நியமித்து அவரது வழக்குகள் அனைத்தும் முடிந்து, பயண தடையை நீக்கிய பிறகு, 07/11/2019 இன்று தாயகம் திரும்பினார். தாயகம் திரும்பிய யேசுராஜ் அவர்களை மணைவி, குழந்தைகள் உட்பட குடும்பமே கண்ணீர் மல்க வரவேற்றனர்.

ஜேசுராஜ் அவர்கள் தாயகம் அனுப்பும் முயற்சியில் சமூக ஆர்வலர் குவைத் இந்திய தூதரகத்தோடு இணைந்து வெங்கட மதி அவர்கள் பல்வேறு வகைகளில் பெரும் உதவியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இளமாறன், நெல்லை மரைக்காயர் உள்ளிட்ட சமூக ஆய்வாளர்களும்  உதவியாக இருந்ததாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add your comments to குவைத்தில் இந்திய தூதரகத்தின் முயற்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் கடந்த 6 வருடங்களாக தாயகம் செல்ல முடியாமல் பரிதவித்த தமிழர் தாயகம் திரும்பினார்:

« PREV
NEXT »