BREAKING NEWS
latest

Thursday, November 7, 2019

ஐக்கிய அரபு அமீரகம் வாட்ஸ்அப் குரல் அழைப்புகளுக்கான தடை விரைவில் நீங்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன:


ஐக்கிய அரபு அமீரகம் வாட்ஸ்அப் குரல் அழைப்புகளுக்கான தடை விரைவில் நீங்கும் என்று  செய்திகள் வெளியாகியுள்ளன:


வாட்ஸ்அப் நிறுவனத்திடம் ஐக்கிய அரபு அமீரகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தேசிய மின்னணு பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் தெரிவித்தார் என்று பிரபல பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதை தொடர்ந்து வாட்ஸ்அப் குரல் அழைப்புகளுக்கான(Voice Call) தடையை ஐக்கிய அரபு அமீரகம் விரைவில் நீக்கக்கூடும், இது நாட்டில் கிடைக்கும் முதல் இலவச (VoIP- எனப்படும் வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால்) சேவையாக கருதப்படுகிறது.

அமீரகத்தில் The Telecommunications Regulatory Authority (TRA) ஆனது தற்போது வரையில்VoIP  பயன்படுத்தி WhatsApp, Skype, Tango, Facetime மற்றும் Viber ஆகியவை தற்போது வரையில் பயன்படுத்த தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது Botim, C’me மற்றும் YzerChat ஆகியவை VoIP app மூலம், பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் கூடுதலாக கட்டணம் செலுத்தி, 

இந்நிலையில்......  நேற்று
சிஎன்பிசிக்கு அளித்த பேட்டியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய மின்னணு பாதுகாப்பு ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் Mohammad Al Kuwaiti பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது ஒத்துழைப்பை அதிகரித்துள்ளது என்றும். வாட்ஸ்அப் குரல் அழைப்புகளுக்கு தடையை நீக்கலாம், இது விரைவில் நடக்கப்போகிறது, என்று அல் குவைத் கூறினார்.

Reporting by: Kuwait tamil pasanga Team

Add your comments to ஐக்கிய அரபு அமீரகம் வாட்ஸ்அப் குரல் அழைப்புகளுக்கான தடை விரைவில் நீங்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன:

« PREV
NEXT »