துபாயில் சமூக வலைதளங்களில் இஸ்லாத்தை அவதூறு செய்த 3 நபர்களுக்கு தலா 5 லட்சம் திர்ஹம் அபராதம்; நாடுகடத்தவும் உத்தரவு:
பேஸ்புக் மற்றும் இன்சஸ்டகிரால் ஆகிய சமூக வலைதலங்களில் இஸ்லாத்தை அவதூறு செய்யும் விதமாக கருத்து வெளியிட்ட குற்றத்தில் துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஒன்றில் காவலர்களாக வேலை செய்த வந்த மூன்று இலங்கையர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு துபாய் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், ஒவ்வொரு நபருக்கு தலா 50,00,00 AED திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் இஸ்லாமிய மதத்தை அவதூறு செய்யும் விதமாக கருத்துக்களை முகநூல், இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக போலிசார் ஆதாரங்கள் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து 28 முதல் 34 வயது வரையிலான 3 வரையும் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்து கைபேசி , லெப்டொப் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இஸ்லாமிய மதத்தை அவதூறு செய்ததாக பதிவு செய்யபட்ட குற்றத்தை மூன்று இலங்கையர்களும் நீதிமன்றத்தில் நிராகரித்தனர். இலங்கையில் நடந்த குண்டுத் தாக்குதல்களின் பின்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் தொடர்பிலான நீதிமன்ற தீர்ப்பு நேற்று துபாய் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அபரதாத்தை செலுத்திய பின்னர் நாடுகடத்தவும் அத்தீர்ப்பில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Reporting by:Kuwait tamil pasanga Team