குவைத் கடல்ப்பாலத்தில் வெள்ளிக்கிழமைகளில் 7 முதல் 10 வரையில் வாகனங்கள் செல்ல தடை ஏன் தெரியுமா....????
குவைத்தில் உள்ள புகழ்பெற்ற ஷேக் ஜாபர் கடல்ப்பாலம் இனிவரும் வெள்ளிக்கிழமைகளில் காலை 7 முதல் 10 மணி வரையில் 3 மணிநேரத்திற்கு சைக்கிள் ஓட்டுபவர்களுக்காக மட்டும் திறந்திருக்கும் என்றும் மற்ற வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு இருக்கும் என்று அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் சங்கத்தின் அறிவுறுத்தல் அடிப்படையில், சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு(வீர்கள்) புதிய இடம் அமைக்கும் வரையில் இது சட்டம் நடைமுறையில் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி Kuwaitcity முதல் Zabia வரையில் மேற்குறிப்பிட்ட நேரங்களில் கடல்ப்பாலம்
மூடப்பட்டு சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு(வீர்கள்) மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் மற்ற வாகனங்கள் இந்த நேரத்தில் பழைய பாதைய பயன்படுத்தி செல்லவும் அறிவுத்தல் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை போக்குவரத்து துறை அமைச்சக அதிகாரிகள் அப்துல்லா-அல்-அஜ்மி கூறினார்.

கடந்த இரு வாரங்களுக்கு முக்கிய சைக்கிள் ஓட்டும் வீரர் ஒரு மரணமடைந்ததும் சில பலத்த காயமடைந்ததும் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
Reporting by :Kuwait tamil pasanga Team