குவைத்தில் இந்த ஆண்டு பொதுமன்னிப்பு பட்டியலில 900 க்கும் மேற்பட்ட கைதிகள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது புதிய செய்தி:
குவைத்தில் ஓவ்வொரு வருடம் பிப்ரவரியில் தேசிய தினம் மற்றும் விடுதலை தினத்தை முன்னிட்டு சிறையில் உள்ள கைதிகளுக்கு நன்நடத்தை அடிப்படையில் மன்னர் அவர்கள் உத்தரவின்படி தண்டனை குறைப்பு மற்றும் விடுதலை வழங்குவது வழக்கம் ஆகும்
இந்த ஆண்டும் அதுபோல் குவைத் சுதந்திரதின கொண்டாட்டங்களை முன்னிட்டு 900 ற்கும் மேற்பட்ட சிறை தண்டனை கைதிகள் விடுதலை செய்யவும், மேலும் பலரது தண்டனை குறைப்பு செய்யவும் வாய்ப்புள்ளது என்ற புதிய தகவலை குவைத்தின் தினசரி நாளிதழ் அல்-கபாஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த செய்தி நாளிதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த வருடம் 706 பேர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர் எனவும் பலரது தண்டனை குறிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
இந்தமாத(ஜனவரி) இறுதியில் குவைத் மன்னரிடம் இந்த பட்டியலில் பரிந்துரைக்கப்படும் என்றும், மன்னரின் ஒப்புதலுக்கு பிறகு தண்டனை குறைப்பு மற்றும் விடுதலை செய்வதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.