BREAKING NEWS
latest

Saturday, January 11, 2020

ஓமன் மன்னர் காலமானார்; இது தொடர்பாக செய்தி ராயல் ஓமன் ஏஜென்சி தெரிவித்துள்ளது:

ஓமன் மன்னர் காலமானார்;இது தொடர்பாக செய்தி ராயல் ஓமன் ஏஜென்சி தெரிவித்துள்ளது:


அரபு உலகின் மிக நீண்ட காலம் ஆட்சியாளரான கிட்டத்தட்ட 50 ஆண்டு ஆட்சி செய்து வந்த சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் அவர்கள்  அவருக்கு வயது 79 நேற்று இரவு காலமானார்.

1970-களில் இவரது தனது 29 ஆவது வயதில்
அவரது தந்தை சயித் பின் தைமூரை ஆட்சியில் இருந்து கவிழ்த்துவிட்டு பதவிக்கு வந்த காபூஸ் பின் சையத் அல் சையத், எண்ணெய் வளமிக்க ஓமன் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அவர் பதவியேற்றபோது ஓமான் தனிமைப்பட்ட , உட்கட்டமைப்பு இல்லாத நாடாக இருந்தது . 

எனினும் , தனது திட்டங்களின் மூலம் ஓமானை முன்னேறிய நாடுகளில் ஒன்றாக மாற்றிய பெருமை அவருக்குண்டு.  4 .5 மில்லியன் மக்கள் வாழும் ஓமானின் அடுத்த ஆட்சியாளர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது .

சுல்தான் கபூஸிற்கு சகோதரர்களோ , பிள்ளைகளோ இல்லை. எனினும்,தனது மரணத்தின் பின் அரச குடும்பத்தில் குழப்பம் வரக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையாக , 2011ம் ஆண்டில் அரச வாரிசை தேர்ந்தெடுக்கும் செயல்முறையில் மாற்றத்தை ஏற்படுத்தினார் .

அரசரை தேர்ந்தெடுக்கும் உயர்சபையில் 5 உறுப்பினர்களை நியமித்துள்ளார் .
அவர்களே அடுத்த அரசரை தெரிவு செய்வார்கள் . சுல்தானின் மூன்று உறவினர்களான அசாத் , ஷிஹாப் மற்றும் ஹைதம் பின் தாரிக் அல் சையத் ஆகியோரில் ஒருவர் அடுத்த சுல்தானாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது .

கடந்த சில மாதங்களாக குடல் புற்றுநோய் காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். இந்நிலையில், நேற்று காபூஸ் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமர்  இரங்கல்:

ஓமன் மன்னர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள  பிரதமர் மோடி, “ சுல்தான் காபூஸ் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன்.  ஓமன் மன்னர், தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டவர். ஓமனை நவீன, செழுமைமிக்க நாடாக மாற்றியவர் சுல்தான் காபூஸ். ஓமனுக்கும் உலகுக்கும் சமாதானத்தின் கலங்கரை விளக்கமாக சுல்தான் காபூஸ் திகழ்ந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

அமீரக அரசு இரங்கல்:

சுல்தானின் மரணம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் , இந்த மரணம் தனது நாட்டில் மட்டுமல்ல , பிராந்தியத்திலும் ஒரு அரசியல் வெற்றிடத்தை விட்டுச்செல்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது .


Reporting by:Kuwait tamil pasanga Team 

Add your comments to ஓமன் மன்னர் காலமானார்; இது தொடர்பாக செய்தி ராயல் ஓமன் ஏஜென்சி தெரிவித்துள்ளது:

« PREV
NEXT »