BREAKING NEWS
latest

Sunday, January 19, 2020

குவைத்தில் தமிழர் மரணம்; மாரடைப்பால் உயிர் பிரிந்ததாக துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் தமிழர் மரணம்; மாரடைப்பால் உயிர் பிரிந்ததாக துயரமான செய்தி வெளியாகியுள்ளது:



குவைத்தில் Jleeb பகுதியில் கடந்த 14 வருடங்களாக வேலை செய்து வந்த இந்திய தமிழகம் திருவாரூர் மாவட்டம், கூடூர் பகுதியைச் சேர்ந்தவர் மரணமடைந்தார் என்று துயரமான செய்தி வெளியாகியுள்ளது. இவருடைய பெயர் ராமமூர்த்தி(வயது-48) ஆகும். ராமமூர்த்தி குடும்பத்தினருடன் இரவு வரையில் மகிழ்ச்சியான பேசியபடி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்தநாள் அவருடைய எண்ணுக்கு குடும்பத்தினர் அழைத்தபோது அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதில் சந்தேகமடைந்த குடும்பத்தினர் குவைத்தில் உள்ள அவருடைய நண்பரிடம் இது பற்றி கூறவே ராமமூர்த்தி தங்கியிருந்த இடத்திற்கு நேரத்தில் சென்றனர்.

அப்போது அங்கு காவல்துறை அதிகாரிகள் ராமமூர்த்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். இதையடுத்து நண்பர் விசாரித்ததில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு
ஏற்கனவே வீசிங்(மூச்சுதிணறல்) நோய் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. ராமமூர்த்திக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள், மனைவி மற்றும் அம்மா உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குவைத் சட்ட நடவடிக்கைகள் முடித்து உடலை விரிவாக தாயகம் அனுப்பும் பணிகளை அவருடைய நண்பர் செய்து வருகிறார். இன்று(19/01/2020) இரவு அல்லது நாளை உடல் தாயகம் அனுப்பி வைக்கப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reporting by Kuwait tamil pasanga Team




Add your comments to குவைத்தில் தமிழர் மரணம்; மாரடைப்பால் உயிர் பிரிந்ததாக துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »