BREAKING NEWS
latest

Saturday, February 15, 2020

குவைத்தில் வரும் சில நாட்களில் குளிர் குறைத்து வெப்பநிலை படிப்படியாக உயரும்; மேலும் அடுத்த 2 நாட்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது

குவைத்தில் வரும் சில நாட்களில் குளிர் குறைத்து வெப்பநிலை படிப்படியாக உயரும்; மேலும் அடுத்த 2 நாட்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது:


குவைத்தில் அடுத்த வரும் சில நாட்களில்  குளிரின் தாக்கம் குறைத்து வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் எனவும் குவைத்தில் வானிலை ஆய்வு மைய அதிகாரி Mohammed Karam  தெரிவித்துள்ளார் என்று குவைத் தினசரி நாளிதழ்  Al-Anba-வை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. மேலும் நாளை ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை மாலையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் அவர் கூறியுள்ளார் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குவைத்தில் வருகிற பிப்ரவரி 25,26 தேசிய தின கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளது. விடுமுறை நாட்களில் வானிலை சீராக இருக்கும் என்றும், கொண்டாட்டத்திற்கு ஏற்றவாறு மிகவும் பொருத்தமானதா இருக்கும் என்றும் Mohammed Karam அவர்கள் தினசரி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இதற்கிடையில், கடந்த மூன்று நாட்களில் குவைத்தில் நிலவிய கடுமையான குளிர்  காரணமாக பல மாணவர்கள் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு வரவில்லை என்று அல்-அன்பா தினசரி நாளிதழ் ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தியில் தெரிவித்துள்ளது.

கல்வித்துறை சார்பில் அரசு சார்ந்த பள்ளிகளில் 90 சதவீதம் மாணவர்கள் இல்லாத நிலையில், பள்ளிக்கூடங்களின் தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், பள்ளிக்கு  வந்த சிறிய அளவிலான மாணவர்கள் அனைவரையும் ஒரே வகுப்பறையில் ஒன்று கூடுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், பின்னர் மாணவர்களை அழைத்துச் செல்ல அவர்களது குடும்பங்கள் தொடர்பு கொண்டு தெரிவித்தனர் எனவும்  அல்-அன்பா தினசரி நாளிதழ் செய்தியில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add your comments to குவைத்தில் வரும் சில நாட்களில் குளிர் குறைத்து வெப்பநிலை படிப்படியாக உயரும்; மேலும் அடுத்த 2 நாட்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது

« PREV
NEXT »