BREAKING NEWS
latest

Monday, February 17, 2020

குவைத் தேசிய தின கொண்டாட்டங்களை முன்னிட்டு 5 நாட்கள் அரசு விடுமுறை; குவைத் சிவில் சர்வீஸ் கமிஷன் அறிவித்துள்ளது.

குவைத் தேசிய தின கொண்டாட்டங்களை முன்னிட்டு 5 நாட்கள் அரசு விடுமுறை; குவைத் சிவில் சர்வீஸ் கமிஷன் அறிவித்துள்ளது.



குவைத் அமைச்சரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் எதிர்வருகிற
பிப்ரவரி-25(செவ்வாய்க்கிழமை), 26(புதன்கிழமை) குவைத் தேசிய மற்றும் விடுதலை தினத்தை முன்னிட்டு 5 நாட்கள் தொடர் விடுமுறையாக அறிவித்து குவைத் சிவில் சர்வீஸ் கமிஷன் அதிகாரபூர்வமாக தளத்தில் சிலமணி நேரத்திற்கு முன்பு செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரையில் இடையில் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி வியாழக்கிழமையும் சேர்ந்து 5 நாட்கள் விடுமுறையாக இருக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.

குவைத்தில் சாதாரணமாக வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை வழக்கமான அரசு விடுமுறை நாட்கள் என்பதால் இந்த வருடத்தில் தேசிய தின கொண்டாட்டங்களுக்கு மொத்தம் 5 நாட்கள் விடுமுறையா அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் விடுமுறை முடிந்து மார்ச் 1-ஆம் தேதி முதல் அரசு துறைகளுக்கு மீண்டும் வேலை நாளாக இருக்கும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குவைத்தின் அனைத்து அரசு துறை ஊழியர்கள் மற்றும் தனியார் துறையில் வேலை செய்யும் அலுவலக ஊழியர்களுக்கு 5 நாட்கள் விடுமுறையாவும், உற்பத்தி துறையில் வேலை செய்யும் தனியார் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 4 நாட்களுக்கும் விடுமுறையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Reporting by kuwait tamil pasanga Team.



Add your comments to குவைத் தேசிய தின கொண்டாட்டங்களை முன்னிட்டு 5 நாட்கள் அரசு விடுமுறை; குவைத் சிவில் சர்வீஸ் கமிஷன் அறிவித்துள்ளது.

« PREV
NEXT »