BREAKING NEWS
latest

Thursday, February 13, 2020

குவைத்தில் மண்சரிவில் உயிரிழந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 6 உயர்ந்துள்ளது; மன்னர் உள்ளிட்டவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்:

குவைத்தில் மண்சரிவில் உயிரிழந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 6 உயர்ந்துள்ளது; மன்னர் உள்ளிட்டவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்:


குவைத் சிட்டியிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் Jahra பகுதியில் குவைத்தின் அரசின்அல்-முத்லா வீட்டுவசதி திட்டத்தின் கட்டுமான வேலைகள் சீனா நிறுவனத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை தோரணமாக  4: 30 மணியளவில் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலையில் ஈடுபட்டிருந்த 10 தொழிலாளர்கள் மீது எதிர்பாராமல் மண், பாறைகள் சரிந்து விழுந்து முழுவதுமாக புதைந்தது மண்ணூக்கு அடியில் சிக்கிக்கொண்டனர்.

இந்த துயரமான சம்பவம் குறித்த குவைத் பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர்கள், 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் மூலமும் விரைந்தனர். இவர்களுடன்  ஜஹ்ரா தீயணைப்பு நிலைய வீரர்கள், சிறப்பு பயிற்சிப் பெற்ற தொழில்நுட்ப மீட்பு குழுவைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் மீட்பு குழுவினர் துரிதமாக நடவடிக்கையால் முதல் கட்டத்தில் 7 பேரை வெளியேற்ற முடிந்தது, ஆனால் அவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 3 உடனடியாக  ஜஹாரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவர் இந்தியர்கள் மற்றும் ஒருவர் நேபாளத்தைச் சேர்ந்தவர். மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் மாலையில் நேரம் கடந்தும் தாமதமாக வேலை செய்து கொண்டிருந்தனர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கடும் குளிரிலும் பெரிய அளவிலான பாறைகள் மற்றும் மண் குவியல்கள் அகற்றப்பட்டு காணாமல் போன 3 தொழிலாளர்களை தேடும் வேலைகள் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் அதிகாலையில் 2 தொழிலாளர்கள் சடலமாகவும் மற்றொரு நபர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர் என்று செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து மீட்பு நடவடிக்கைகளை முடித்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து தேடப்பட்ட தொழிலாளர்களில் 2 பேரும் உயிரிழந்த நிலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இறந்த 6 பேரில் 4 பேர் நேபாளநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இறந்த 2 பேர் எந்த நாட்டவர்கள் என்பது குறித்த கூடுதல் தகவல்கள் தெரியவில்லை.

இந்த துரதிஷ்டவசமாக விபத்தால் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு அமீர்(மன்னர்) ஷேக்-சபா-அல்-அஹ்மத்-அல்-சபா, இளவரசர் ஷேக் -நவாஃப்-அல்-அஹ்மத்-அல்-சபா மற்றும் பிரதமர் சபா-அல்-காலித்-அல்-சபா ஆகியோர் இரங்கல் தெரிவித்து செய்தியையும் மற்றும் படுகாயமடைந்தவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து துரிதமான  விசாரணைக்கு பொதுப்பணித்துறை அமைச்சர்-ராணா அல்-ஃபரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

Reporting by kuwait tamil pasanga Team.



Add your comments to குவைத்தில் மண்சரிவில் உயிரிழந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 6 உயர்ந்துள்ளது; மன்னர் உள்ளிட்டவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்:

« PREV
NEXT »