BREAKING NEWS
latest

Sunday, February 16, 2020

குவைத்தில் தனியார் துறையில் வேலை செய்யும் 60 வயதிற்கு மேற்பட்ட வெளிநாட்டினர் விசா புதுப்பித்தலை நிறுத்த முடிவு:

குவைத்தில் தனியார் துறையில் வேலை செய்யும்  60 வயதிற்கு மேற்பட்ட வெளிநாட்டினர் விசா புதுப்பித்தலை நிறுத்த முடிவு:


குவைத்தில் நாட்டில் வெளிநாட்டு  தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியாகவும், மக்கள்தொகை ஏற்றத்தாழ்வை சரிசெய்வதற்கான தொடர்ச்சியாக மனிதவளத்திற்கான பொது ஆணையம்(PMA)  தனியார் துறையில் 18-ஆம் நம்பர் விசாவில் வேலை செய்யும் 60 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் விசா புதுப்பித்தலை நிறுத்த முடிவு செய்துள்ளது என்று அல்-சாயாஸா தினசரி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

தகவலறிந்த செய்தி வட்டாரங்களின்படி, உயர் கல்வி பட்டம் பெற்றவர்கள் இந்த முடிவால் பாதிக்கப்பட மாட்டார்கள். இதில் மருத்துவர்கள், பொறியாளர்கள், பத்திரிகையாளர்கள், சட்ட ஆலோசகர்கள், நிபுணர்கள், நிர்வாக இயக்குநர்கள், தனியார் நிறுவன பங்காளிகள் மற்றும் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

இந்த முடிவால் முக்கியமாக எழுத்தர் ஊழியர்கள்(Clerical staff), ஓட்டுநர்கள்( Drivers) மற்றும் மாண்டூப்ஸ்(Company Representatives) மற்றும் அதிகமான கல்வித்தகுதி இல்லாத
தொழிலாளர்கள் தொழிலாளர்கள்  அதிகமான பாதிக்கப்படும் என கருதப்படும்

மேலும் செய்தியில் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் பணியில் அதிக சுறுசுறுப்பாக இருப்பார்கள் என்பதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  புதிய முடிவு இந்தியர்கள் உட்பட ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களை பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.

Add your comments to குவைத்தில் தனியார் துறையில் வேலை செய்யும் 60 வயதிற்கு மேற்பட்ட வெளிநாட்டினர் விசா புதுப்பித்தலை நிறுத்த முடிவு:

« PREV
NEXT »