குவைத்தில் 60-வயதிற்கு மேற்பட்ட வெளிநாட்டினர் விசா புதுப்பித்தல் பிரச்சினை மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது:
குவைத்தில் உள்ள பிரபல பத்திரிகையை மேற்கோள் காட்டி இரண்டு தினங்களுக்கு முன்பு பல செய்தி தளங்கள் 60-வயதிற்கு மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விசா புதுப்பித்தல் செய்வது ரத்து செய்யப்பட்டது என்ற செய்தி வெளியானது. நமது தளத்திலும் அதிகாரபூர்வமாக செய்தி தளத்தின் செய்தி என்பதால் இது தொடர்பான செய்தி பதிவு செய்தோம் தற்போது அதுகுறித்து புதிய தெளிவு தற்போது வெளியாகியுள்ளது.
குவைத்தில் வேலை செய்யும் 18-ஆம் நம்பர் விசாவில் உள்ள 60-வதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட சில துறைகளில் வேலை செய்கிற வெளிநாட்டு தொழிலாளர்கள் விசா புதுப்பித்தல் செய்யப்படமாட்டாது என்று கூறப்பட்ட பிரிவின் கீழ் உள்ள ஒரு இந்திய தொழிலாளின் விசா இன்றைய தினம்(18/02/2020) புதுப்பித்தல் செய்யபட்ட நகல் இதுவாகும்.
எனவே இதன் மூலம் தற்போது வரையில் இந்த சட்டம் நடைமுறையில் வரையில் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் இது குறித்து தொழிலாளர்துறை அதிகாரி ஒருவர் தற்போது வரையில் இந்த சட்டம் நடைமுறையில் வரவில்லை என்று விளக்கமளித்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அவர் மேலும் அவர் கூறுகையில் வருங்காலத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் 60-வயதிற்கு மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களின் விசா புதுப்பித்தலை ரத்து செய்யும் சட்டம் நடைமுறையில் வரலாம் என்ற கருத்தையும் அவர் தெளிவுபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Reporting by: Kuwait tamil pasanga Team