குவைத்தில் திறமையான தொழிலாளர்களின் 70-வயது ஆனாலும் விசா புதுப்பித்தல் செய்ய எந்த தடையும் இல்லை,அதிகாரி விளக்கம்:
வெளிநாட்டு தொழிலாளர்கள் குடியிருப்பு அனுமதி( விசா) புதுப்பிக்க குறிப்பிட்ட வயது வரம்பு இதுவரையில் நிர்ணயம் செய்யவில்லை என்று மனிதவள மேம்பாட்டு துறையின் உதவி இயக்குநர் அப்துல்லா-அல்-மாதே பத்திரிகைகள் சந்திப்பில்
தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அவர், நாடு முழுவதும் உள்ள 6 மாகாணங்களில் உள்ள அலுவலகங்களிலும் விண்ணப்பதாரர்களின் வயதைப் பொருட்படுத்தாமல் குடியிருப்பு ஆவணங்களை புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்.
விண்ணப்பதாரர் தகுதி வாய்ந்தவர் மற்றும் திறமையானவர் எனக் கருதப்படும் வரை, அவர்கள் 70 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தாலும், பணி அனுமதிகளை புதுப்பிப்பதில் எந்த தடையும் இருக்காது என்று விளக்கமளித்தார்.
இதன் மூலம் 60 வயதிற்கு மேற்பட்ட வெளிநாட்டினர் தொழிலாளர் விசா புதுப்பித்தல் செய்ய எந்த தடையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.