குவைத்தில் விசா மோசடியில் ஈடுபட்ட மூன்று இந்தியர்களை அதிகாரிகள் கைது செய்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது:
குவைத்தில் இந்தியர்களிடம் விசா மோசடியில் ஈடுபட்டதாக 3 இந்தியர்களை குவைத் பாதுகாப்பு துறையின் ரகசிய பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
இதில் 2 பேர் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றொரு நபர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர்கள் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 50 ற்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றியதாக புகார் எழுந்த நிலையில் கைது செய்யப்பட்டனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மூன்று பேர் கொண்ட கும்பலின் தலைவன் என்று கூறப்படும் பரிந்தகுமார் கடந்த ஜூன்- ஜூலை மாதங்களில் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வேலை என்று கூறி சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தனர் என்று கூறப்படுகிறது. குவைத் மற்றும் தாயகத்தில் உள்ளிட்ட இடங்களில் இருந்து 50 ற்கும் மேற்பட்ட நபர்கள் இவரை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வருகிற முனையத்தில் 12,000 நபர்களுக்கு வேலைக்காக ஒப்பந்தம் தனக்கு கிடைத்துள்ளது என்றும் உயர்ந்த பதவிகளில் நல்ல சம்பளத்துடன் வேலை என்று கூறியுள்ளான். மேலும் ஓட்டுநர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட வேலைக்கு நல்ல சம்பளத்துடன் வேலை என்றும் கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இப்படி ஏமாந்த நபர்களுக்கு போலியான விசா மற்றும் குவைத் தொழிலாளர் துறை அமைச்சகத்தின் போலியான ஒப்பந்தம் கடிதம் ஆகியவை வழங்கி ஏமாற்றி உள்ளான். இதற்காக ஒவ்வொரு நபரிடமும் முன்பணமாக 1 லட்சம் வீதம் அவனுடைய வங்கி கணக்கில் செலுத்தவும் கூறியுள்ளான். Orginal Visa மற்றும் ஒப்பந்தக்கடிதம் குவைத்திற்கு வேலை கிளம்பும்போது கையில் வழங்குவதாக அவன் கூறினான்.
இவனை நம்பி பணம் கொடுத்த நபர்கள் பல மாதங்கள் கடந்தும் தொடர் நடவடிக்கைகள் எதுவும் இல்லாததால் சந்தேகம் அடைந்தது தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவன் சரிவர பதிலளிக்கவில்லை என்றும் நாட்கள் செல்ல செல்ல தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து குவைத்தில் இவனிடம் ஏமாந்த நபர்கள் ஒன்று சேர்ந்து காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து நடந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவித்தது உண்மை என்று தெரியவந்த நிலையில் இதில் தொடர்புடைய 3 நபர்களை ரகசிய பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.
Reporting by:Kuwait tamil pasanga Team