சென்னை - சேலம் இடையே மாலை நேரத்திலும் விமான சேவை இந்த மாத இறுதியில் சேவை துவங்கும் என்று அறிவிப்பு:
சேலத்திலிருந்து சென்னைக்கு, மாலை நேரத்திலும் விமான சேவையை தொடர, இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக, சேலம் எம்பி பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
சேலத்தையும், சென்னையயும் இணைக்கும் விமான சேவை, காலை மட்டுமே இருந்து வந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இனி மாலையும் வழங்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மாலை 4 மணிக்கு சென்னையிலிருந்து சேலத்திற்கும், மீண்டும் மாலை 5.30 மணிக்கு, சேலத்திலிருந்து சென்னைக்கும், புதிய விமான சேவை, இந்த மாத இறுதிக்குள் துவங்கும் என அவர் தெரிவித்தார்.
இரவு நேரத்தில் சென்னையிலிருந்து வெளிநாடு செல்லும் சேலம் பயணிகளுக்கும் டில்லி, கல்கத்தா, மும்பை, ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு சேலத்திலிருந்து பயணம் செய்பவர்களுக்கும், இந்த மாலை நேர விமான சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.