வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவாத ஒரே நாடாக சவுதி அரேபியா உள்ளது:
கத்தார் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட முதல் தகவலை கத்தார் சுகாதார அமைச்சகம் இன்று(சனிக்கிழமை) சிறிது நேரத்திற்கு முன்பு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
நோயாளி ஈரானில் இருந்து சமீபத்தில் திரும்பிய 36-வயதான கத்தார் பெண்மணி என்பது தெரியவந்துள்ளது.
அவர் நிலைமை தற்போது சீராக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் மேலும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கத்தார் கொரோனா பாதிப்பு தொடர்பான முதல் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், எந்தவொரு கொரோனா வைரஸ் வழக்கையும் பதிவு செய்யாத ஒரே வளைகுடா நாடாக சவுதி அரேபியா தற்போது திகழ்கிறது.
வளைகுடா பிராந்தியத்தில் கொரோனோ நோய்தொற்று வெடித்ததில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு ஈரான் ஆகும், இதுவரை 43 இறப்புகள் அதிகாரபூர்வமாக பதிவாகியுள்ளது மற்றும் கிட்டத்தட்ட 600 மேற்பட்டோர் நோய்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அங்குள்ள எம்பி ஒருவரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக மரணமடைந்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் Bccnews 210 பேர் வரையில் இறந்ததாக மருத்துவமனை ஆதாரங்கள் மேற்கோள் காட்டி சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் வளைகுடா நாடுகளில் பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் ஈரானுக்கு சென்று வந்த நபர்களிடம் அல்லது அங்கு இருந்தவர்களுடன் தொடர்பு கொண்டவர்களிடமோ கண்டறியப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் இறப்புகள் பதிவான ஒரே நாடும் ஈரான் மட்டுமே. மேலும் வைரஸ் பரவுவதை அடுத்து தேவையற்ற பயணிப்பதை தவிர்க்க குவைத் தனது குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது