குவைத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்று பரிசோதனை அனைவருக்கும் இலவசம்; பாகுபாடு இல்லை சுகாதாரத்துறை அறிவிப்பு:
குவைத்தில் கொரோனா வைரஸை பரிசோதனைக்கு குவைத் குடிமக்களை போன்றே வெளிநாட்டினருக்கு கட்டணம் ஏதும் இல்லை எனவும், குவைத் குடிமக்கள் அல்லாதவர்கள் தற்போதுள்ள சூழ்நிலையில்தங்கள் தாய் நாடுகளுக்கு செல்ல(குவைத்தை விட்டு வெளியேற) எந்தவொரு தடை விதிக்கப்படவில்லை என்றும் பொது சுகாதார உதவி துணை செயலாளர் டாக்டர் புத்தெய்னா அல் முதாஃப் தெரிவித்தார்.
எந்தவொரு நபருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டாலும் குவைத் குடிமக்களுக்கு கடைபிடிக்கப்படும்
அதே நடைமுறைகளின் படிதான்,அனைவருக்கும் நாங்கள் தரமான சிகிச்சை அளிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளது என்று அல்-முதாஃப் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
எகிப்திலிருந்து வருபவர்களுக்கான நடைமுறைகள் குறித்து பத்திரிகையாளர் கேள்விக்கு அல்-முடாஃப் மேலும் கூறுகையில் அவர்கள் தங்கள் நாடுகளிலிருந்து வரும்போதே நோய்தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் எனவும், மேலும் கொரோனா தொற்று எதுவும் இதுவரையில் அங்கிருந்து வந்தவர்களிடம் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் எகிப்தின் தற்போதைய நிலைமையை மதிப்பிடுவதற்கு குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் உலக சுகாதார நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.