BREAKING NEWS
latest

Sunday, February 23, 2020

குவைத் வீட்டுத் தொழிலாளர்கள் சம்பளம் மற்றும் சலுகைகள் குறித்த திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் அடுத்த வாரம் முதல் நடைமுறையில் வருகிறது:

குவைத் வீட்டுத் தொழிலாளர்கள் சம்பளம் மற்றும்  சலுகைகள் குறித்த திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் அடுத்த வாரம் முதல் நடைமுறையில் வருகிறது:

குவைத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த  லட்சக்கணக்கான வீட்டுத் தொழிலாளர்கள்( Domestic Works) வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் திருத்தப்பட்ட புதிய வீட்டுத் தொழிலாளர்கள் சட்ட விதிமுறைகள் அடுத்த வாரம் முதல் நடைமுறையில் வருகிறது என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு  குவைத்தில் வேலை செய்யும் மற்றும் வேலைக்கு புதிதாக வருகிற அனைவருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு நபருக்கும் புதிய நிபந்தனைகளின் கீழ்
தொழிலாளர்கள் சட்டத்திற்கு உட்பட்ட
வீட்டு உரிமையாளர்(Sponsor)
போதுமான வாழ்க்கை வசதிகள், பொருத்தமான தங்குமிடம், உணவு மற்றும் உடைகள் வழங்க கடமைப்பட்டிருப்பார். மேலும் உடல்நலக்குறைவு உள்ளிட்ட நேரங்களில் தேவையான சிகிச்சை அளிக்கவும், ஆரோக்கிய இன்சூரன்ஸ் செலவு முழுவதையும் உரிமையாளர்(Sponsor) ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் தொழிலாளிக்கு சம்பளம் வழங்க வேண்டும் மற்றும் சம்பளம் வழங்கி ரசீது கையொப்பமிட்டு அதை முதலாளி பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

புதிய நிபந்தையின்படி வீட்டுத் தொழிலாளர்கள் 12 மணிநேரத்திற்கு அதிகமாக  வேலை செய்ய கூடாது எனவும், வேலை நேரத்தில் ஒவ்வொரு 5 மணி நேரத்திற்கு 1 மணிநேரத்திற்கு கண்டிப்பாக  ஓய்வு அளிக்க வேண்டும் எனவும். மேலும்  இரவு நேரத்தில்  கண்டிப்பாக 8 மணிநேரத்திற்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று நிர்ணயம் செயல்பட்டுள்ளது.
மேலும் வாரத்தில் ஒரு நாள் வார விடுமுறையும் மற்றும்  ஒவ்வொரு வருடத்திற்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்க வேண்டும் என்றும், ஒப்பந்தத்தின் முடிவில், வீட்டு உரிமையாளர் ஒரு மாத ஊதியத்திற்கு சமமான சலுகைகள் வழங்கப்படும்.

தொழிலாளியின்  பயண ஆவணங்களை வைத்திருக்க வீட்டு உரிமையாளருக்கு அதிகாரம் இல்லை எனவும். ஓப்பந்தம் விதிமுறைகள்  வீட்டு உரிமையாளர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒருபோல பதமாகும் என்றும் தெளிவுபடுத்தபட்டுள்ளது.புதிய ஒப்பந்தப்படி தொழிலாளி மற்றும்  முதலாளிக்கும் இடையே தகராறு ஏற்பட்டால், தொழிலாளர் துறை அமைச்சக வீட்டுத் தொழிலாளர் பிரிவு மூலம் தீர்வு காண்பதற்கு வீட்டு உரிமையாளர்  நிர்ப்பந்திக்கப்படுவார்  எனவும் வரையறை செய்யபட்டுள்ளது.

Reporting by Kuwait tamil pasanga Team











Add your comments to குவைத் வீட்டுத் தொழிலாளர்கள் சம்பளம் மற்றும் சலுகைகள் குறித்த திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் அடுத்த வாரம் முதல் நடைமுறையில் வருகிறது:

« PREV
NEXT »