அபுதாபியில் வேலை செய்துவந்த மூன்று தமிழக இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது:
அபுதாபியில் வேலை செய்துவந்த தமிழ்நாட்டை சேர்ந்த மூவர் அல்-அய்னில் பகுதியில் கார் மோதியதில் உயிரிழந்தனர். ராம்குமார் குணசேகரன்(30) , சுபாஷ் குமார்(29) மற்றும் செந்தில் களியபெருமாள்(36) இவர்கள் மூவரும் அபுதாபியின் முசாபாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள்.
அல்-அய்ன் வேலை செய்து வரும் இந்தியாவைச் சேர்ந்த சமூக சேவகர் சமத் பொம்தனம் கூறியதாவது, இந்த துயரமான சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் நடந்தது.
அவர்கள் சென்ற வாகனம் முன்னால் சென்ற மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் குணசேகரன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்று கூறினார்.
சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு மூன்று உறவுகளின் உடல்கள் நேற்று இரவு ஷார்ஜா விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் தாயகம்( சென்னைக்கு) அனுப்பி வைக்கப்பட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இதையடுத்து சென்னையிலிருந்து அதிகாலையில் உடல்களை உறவினர்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தனர். இதற்கான வேலைகளை Kerala Muslim Cultural Centre அமைப்பினர் செய்துள்ளனர்.