BREAKING NEWS
latest

Thursday, March 5, 2020

குவைத் அமைச்சரவை கொரோனா வைரஸ் இல்லையென நிரூபிக்கும் மருத்துவ சான்றிதழ் தேவை என்ற உத்தரவை ரத்து செய்துள்ளது:

குவைத் அமைச்சரவை சற்றுமுன் இந்தியா, இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளின் கொரோனா வைரஸ் இல்லையென நிரூபிக்கும் மருத்துவ சான்றிதழ் தேவை என்ற உத்தரவை ரத்து செய்துள்ளது:




இதன் விரிவான விளக்கம் பின்வருமாறு:

குவைத்தில் கொரோனா நோய்தொற்று கண்டறியப்பட்ட நிலையில் குவைத் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பிலிப்பைன்ஸ், இந்தியா, பங்களாதேஷ், எகிப்து, சிரியா, அஜர்பைஜான், துருக்கி, இலங்கை, ஜார்ஜியா, லெபனான் ஆகிய நாடுகளில் உள்ளவர்கள் மார்ச் 8, 2020 முதல்(எந்தவொரு நபராக இருந்தாலும்) குவைத்தில் நுழைய  PCR(Polymerase Chain Reaction) எனபடும் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் தேவை என்று அறிவித்தது, கொரோனா உலகம் முழுவதும் பரவி வருகிற நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற அடிப்படையில் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து  இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ்  உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த  ஆயிரக்கணக்கான விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் தாயகம் சென்ற மக்கள் செய்வது அறியாமல் தவித்தனர்.

இதையடுத்து இந்தியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் இது எந்த அளவுக்கு நடைமுறையில் கொண்டுவர முடியும் என்பது குறித்து விளக்கமளித்து, குவைத் சுகாதாரத்துறை மற்றும் விமான போக்குவரத்து துறைக்கு கடிதம் அனுப்பியது. பாதிக்கப்பட்ட நாடுகளின் கோரிக்கைகள் மற்றும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பரிசோதனைகள் செயல்படுத்தப்படுவது கடினம் என்பதை உணர்ந்த பின்பு குவைத் அமைச்சரவை கவுன்சில் இன்று  மாலையில் கூடிய கூட்டத்திற்கு பிறகு உத்தரவை ரத்து செய்ததாக அறிவித்துள்ளது.

மருத்துவ பரிசோதனை சான்றிதழ் தேவை என்று நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இந்திய வெளியுறவுத்துறை டெல்லியிலுள்ள குவைத் தூதரகத்திற்கு விளக்கம் அளித்து கடிதம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதில் முக்கியமாக குவைத் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவில் உள்ள மருத்துவ பரிசோதனை ஏஜென்சிகளுக்கு இந்த பரிசோதனை செய்வதற்கு சட்டப்படியுள்ள அதிகரமோ, தேவையான வசதிகளோ இல்லை என்று அதில் தெளிவுபடுத்தியது. இதுபோல் இந்த பிரச்சினை தொடர்பான விளக்கம் வெளியுறவுத்துறை மூலம் குவைத் சுகாதாரத்துறை மற்றும் குவைத் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது

அதுபோல் பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் தங்கள் நாடுகளிலிருந்து வரும் ஒவ்வொரு நபருக்கும் இந்த நோய்தொற்று இல்லை என்று உறுபடுத்தும் சான்றிதழ் வழங்க இயலாது என்று தன்னுடைய நிலைப்பாட்டை அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இன்று மாலையில் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு

உங்கள் ktpnews

Add your comments to குவைத் அமைச்சரவை கொரோனா வைரஸ் இல்லையென நிரூபிக்கும் மருத்துவ சான்றிதழ் தேவை என்ற உத்தரவை ரத்து செய்துள்ளது:

« PREV
NEXT »