BREAKING NEWS
latest

Friday, April 3, 2020

குவைத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார் மாரடைப்பா அல்லது கொரோனவா என்பது உறுதிபடுத்த முடிவு:

குவைத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார் மாரடைப்பா அல்லது கொரோனவா என்பது உறுதிபடுத்த முடிவு:


குவைத்தில் கடுமையான நெஞ்சுவலி காரணமாக அமிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட இந்தியர் ஒருவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.  மரணத்திற்கான காரணம் மற்றும் கொரோனா நோய்தொற்று தொடர்புகள் தீர்மானிக்க சுகாதார அதிகாரிகளின் விசாரணை முடிவுக்காக சம்மந்தப்பட்ட துறையினர் காத்திருக்கிறார்கள்.

குவைத் தினசரி நாளிதழ் அறிக்கையின்படி, அவர் ஒரு கட்டிடத்தில் தங்கியிருந்தார், அந்த கட்டிடம்   கொரோனா நோய்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளியுடன் தொடர்பில் இருந்த நபர்களை தனிமைப்படுத்தப்பட்ட கட்டிடம் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலையில் இந்தியருக்கு கடுமையான மார்பு வலி இருப்பதாகவும், அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அவர் இறந்துவிட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவரிடமிருந்து பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டு, அவர் COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று சோதனை செய்து அறிக்கை வழங்க அறிவுறுத்தல் செய்யபட்டுள்ளது
மரணம் மாரடைப்பால் ஏற்பட்டதா அல்லது கொரோனா தொடர்பானதா என்பதை உறுதிப்படுத்த இந்த வழக்கு தொடர்பான கூடுதல் ஆலோசனைகளுக்காக குவைத் உலக சுகாதார அமைப்பை தொடர்புகொண்டு மதிப்பாய்வு செய்யும்.

அவர் வசித்து வந்த கட்டிடத்திலிருந்து சுமார் 900 வெளிநாட்டு தொழிலாளர்கள் Kabd பகுதியில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு மாற்றப்பட்டதாகவும், கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் அதே கட்டிடத்தைச் சேர்ந்த மேலும் 23 பேர் குவைத்தின் Jaber மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Soure: Kuwait Newspaper 

Add your comments to குவைத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார் மாரடைப்பா அல்லது கொரோனவா என்பது உறுதிபடுத்த முடிவு:

« PREV
NEXT »