குவைத்தில் கொரோனவுக்கு முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது; இந்தியர் என்று தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது:
குவைத்தில் கொரோனா வைரஸ் காரணமாக முதல் மரணம் ஏற்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சகத்தை மேற்கோள்காட்டி குவைத்தின் பிரபல நாளிதழ் அல்ராய் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய்தொற்று காரணமாக சிகிச்சையில் இருந்த இந்தியாவைச் சேர்ந்தவர் உயிரிழந்தார் என்றும் பத்திரிகை தெளிவுப்படுத்தயுள்ளது.
மேலும் பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் வைரஸ் நோய்தொற்று காரணமாக Jabir மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், திடிரென நிலைமை கவலைக்கிடமாகி மரணமடைந்தார் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் நேற்று முன்தினம் கொரோனா நோய்தொற்று கண்டறியப்பட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் தங்கியிருந்த இந்தியர் ஒருவர் நெஞ்சுவலியால் காரணமாக Amiri மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இப்படி மரணமடைந்த இந்தியரிடம் எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளின் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா நோய்தொற்று இருந்து கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவருடைய மரணத்திற்கு காரணம் நெஞ்சுவலியா..?? அல்லது கொரோனா என்பதை உறுதிப்படுத்த மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்தது உலக சுகாதார துறையின்(WHO) பதிலுக்காக காத்திருக்கிறது குவைத் சுகாதாரத்துறை.
இதற்கிடையில் குவைத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் ஒருவர் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளதால், குவைத்தில் கொரோனா வைரஸ் மூலம் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் உலக இந்த உயிரிழபபு தகவலை கொரோனா வைரஸ் நோய்தொற்று விபரங்கள் பதிவாகும் இணையதளமும் உறுதியாகியுள்ளது.
உங்கள் #Ktpnews