இந்தியாவிலிருந்து நேரடியாக குவைத்திற்கு வந்த 19 இந்தியர்கள்,தூதுவர் தலையீடு மூலம் திரும்பி தாயகம் அனுப்பப்பட்டனர்:
இந்த தவறை செய்யாதீர்கள்......
குவைத்தில் கோரொனா நோய்தொற்று பாதிப்புகள் காரணமாக இந்தியா உள்ளிட்ட 34 நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் நேரடியாக நுழைய கடந்த சில மாதங்களாக அரசு தடை விதித்துள்ளது. மேலும் குவைத் அரசின் தீர்மானங்கள் அடிப்படையில் இந்த தடையில் மாற்றங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்( இன்று 14/10/2020 வரையில் தடை உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை)
ஆனால் குவைத்தில் தடை உத்தரவு நடைமுறையில் இருந்தாலும் சுகாதார அமைச்சகம் உட்பட அத்தியாவசிய சேவைகளில் வேலை செய்யும் வெளிநாட்டு அரசு ஊழியர்கள் சிறப்பு அனுமதி பெற்ற பின்னர் நேரடியாக குவைத்துக்குள் நுழையலாம் என்ற உத்தரவும் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 9:20 மணிக்கு இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியில் விமான நிலையத்திலிருந்து KWT-1352 விமானத்தில் 157 இந்தியர்கள் குவைத் வந்தடைந்தனர். இதில்138 பேர் குவைத் அரசின் நேரடி அரசு ஊழியர்கள் என்பதால் குவைத்தில் நேரடியாக நுழைய விமான நிலைய அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.
மீதியுள்ள 12 பெண்கள் மற்றும் 7 ஆண்கள் உள்ளிட்ட 19 பேர் குவைத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் இவர்கள் நேரடி அரசு ஊழியர்கள் இல்லை எனவும், ஒப்பந்த ஊழியர்கள் என்றும் குவைத்தில் நுழைய அனுமதிக்க முடியாது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர் என்றும், இதையடுத்து அவர்கள் குவைத் விமான நிலையத்தில் கடந்த ஒரு நாளாக தவிர்த்து வந்தனர் எனவும் இவர்களை திருப்பி இந்திய அனுப்பும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன எனவும் தகவல்கள் வெளியானது,இந்த 19 நபர்களில் இரண்டு பெண்கள் கர்ப்பிணிகள் என்ற மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.
ஒப்பந்தம் ஊழியர்கள் குவைத்தில் நுழைய பிரச்சினை இல்லை என்று ஒரு ஏஜென்சிகள் கூறி இவர்களை குவைத் அனுப்புவதற்கு ஒரு நபரிடம் இருந்து 59,000 ஆயிரம் ரூபாய் வரையில் பெற்றனர் என்று அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.குவைத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் அனுமதியின்றி நாட்டிற்குள் நுழைய முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று முன்னர் எச்சரித்திருந்தது. குவைத் சட்டப்படி அனுமதியின்றி குவைத்தில் நுழைய முயற்சி செய்தால் கைரேகை பதிவு வைத்து நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட பின்னர் மட்டுமே அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள். பின்னர் இப்படிபட்ட நபர்கள் ஒருபோதும் குவைத்தில் நுழைய முடியாது.
இருப்பினும் இந்த பிரச்சினை புதிய இந்திய தூதர் சிபி-ஜார்ஜ் கவனத்திற்கு வந்த பின்னர், உடனடியாக தலையிட்டு, தூதரகத்தின் முதல் செயலாளர் பஹத்-அல்-சூரி தலைமையிலான தூதரக அதிகாரிகளை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், குவைத் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அவர்கள் கைரேகைகளை பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
எனவே குவைத் அரசின் அறிவிப்புகள் கவனமாக பாருங்கள், அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே நேரடி விமானம் மூலம் குவைத்தில் நுழைய முடியும், போலி ஏஜென்சிகள் மற்றும் இடைத்தரகர்கள் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். ஆனால் மற்றொரு மாற்று வழி என்ற முறையில் இந்தியர்கள் பலர் விசிட்டிங் விசாவில் துபாய் வந்து அங்கு இரண்டு வாரங்கள் தங்கியிருந்து கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் பெற்று பின்னர் குவைத்தில் நுழைந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த மறைமுக நுழைவு வழி எப்போது தடைபடும் என்பது தெரியவில்லை.
உங்கள் #Ktpnews