குவைத்தில் ட்ரோன் மூலம் குற்றங்கள் கண்டறிய முயற்சி பரிசோதனையில் 3 பேர் கைது:
அக்டோபர்-30,2020
குவைத்தில், சாலைகள் மற்றும் திறந்தவெளியில் நடக்கும் குற்றங்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல் குற்றங்களை கண்காணிக்க போக்குவரத்துத் துறை ட்ரோன் அமைப்பை புதிதாக அமைத்துள்ளது. இணக்கமற்ற மற்றும் போக்குவரத்து மீறல்களைக் கண்டறிய சமீபத்திய நாட்களில் இந்த முறை சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் களப் பரிசோதனை அக்டோபர் 27 அன்று செய்யப்பட்டது, ட்ரோன் அமைப்பு மூலம் வாஃப்ரா பகுதியில் கண்காணிப்பின் போது ஆபத்தான போக்குவரத்து மீறல்களின் காட்சிகளை அதிகாரிகள் பதிவு செய்தனர். அதாவது மூன்று வாகனங்களை அதை ஒட்டியவர்கள் பயங்கரமான வேகத்தில் ஓட்டிச் சென்றனர்.
இருப்பினும், குற்றவாளிகள் இதை மறுத்தனர், ஆனால் காட்சிகளை ஆதாரமாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தனர். அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ட்ரோன்களில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் போக்குவரத்து சட்டத்தை மீறப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரமாக போக்குவரத்து நீதிமன்ற நீதிபதிக்கு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுகாதார அமைச்சக அவசரகால மருத்துவ பிரிவின் இயக்குநர் முந்தர்-அல்-ஜலாஹ்மா, உள்ளூர் நாளிதழு ஒன்றிக்கு அளித்த பேட்டியில் 2019 ஆம் ஆண்டில் 10,311 சாலை விபத்துக்களை தங்கள் குழுவினர் கையாண்டார்கள் என்றார். இது மாதத்திற்கு 860 விபத்துக்கள் அல்லது ஒரு நாளைக்கு 28 விபத்துக்கள் என்று கணக்கிடுகிறது.
அல்-ஜலாஹ்மாவின் கூற்றுப்படி, கடந்த-2019 ஜனவரி மாதத்தில் 943, பிப்ரவரியில் 934, மார்ச் மாதத்தில் 889, ஏப்ரல் மாதம் 892, மே மாதத்தில் 801, ஜூன் மாதம் 822, ஜூலை மாதம் 828, ஆகஸ்டில் 722, செப்டம்பரில் 689, அக்டோபரில் 855 வழக்குகள்,நவம்பரில் 959, டிசம்பரில் 977 பதிவாகியுள்ளன.