குவைத் அரசு தடை விதித்துள்ள 34 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நேரடியாக குவைத்தில் நுழைய புதிய திட்டம் அமலுக்கு வருகிறது:
அக்டோபர்-21,2020
குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜசீரா ஏர்வேஸ் நிறுவனங்கள் சேந்து குவைத்துக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து தொழிலாளர்கள்(பயணிகள்) நேரடியாக நுழைய அனுமதிக்கும் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான திட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளன என்று குவைத் ஏர்வேஸின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் கேப்டன் அலி-முகமது-அல்-துகான் தெரிவித்தார். சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின்படி இந்த திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட திட்டம் செயல்படுத்த அனுமதி வழங்கினால் விமான நிலையத்தின் உள்ளே இதற்காக நியமிக்கப்பட்ட கட்டிடத்தில் பயணிகளின் பி.சி.ஆர் உள்ளிட்ட தேவையான அனைத்து சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம். இந்த நடைமுறை நடைமுறைப்படுத்தப்பட்டால், தற்போதுள்ள நுழைவு கட்டுப்பாடுகள் உள்ள நாடுகளின் பயணிகள் வேறு எந்த நாட்டிலும் பயணம் செய்யாமல் நேரடியாக குவைத்துக்குள் நுழைய முடியும்.மேலும் பயணிகள் குவைத்தில் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தையும் முடிக்க முடியும்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவது விமான நிறுவனங்கள் மற்றும் பிற அரசு துறைகளின் நிதி வருவாயை அதிகரிப்பது மட்டுமல்லாமல், விமான நிலையத்தின் 30 சதவீதம் என்ற நிலைமாறி இயக்க திறனை 24 மணிநேரமும் அதிகரிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் நாட்டின் சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்த பரிந்துரைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து குவைத் ஏர்வேஸ் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக அதிகாரி துக்கான் விமான நிலையத்தை இன்று ஆய்வு செய்த பிறகு மேலும் வலியுறுத்தினார்.