BREAKING NEWS
latest

Tuesday, October 27, 2020

குவைத்தில் 34 நாடுகளின் தடை நீக்குவது தொடர்பாக நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எந்த முடிவு எடுக்கப்படவில்லை:

குவைத்தில் 34 நாடுகளின் தடை நீக்குவது தொடர்பாக நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எந்த முடிவு எடுக்கப்படவில்லை:

அக்டோபர்-26,2020


குவைத்தில் 34 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மீதான நேரடி நுழைவுத் தடையை நீக்குவது தொடர்பாக இன்றைய(திங்கட்கிழமை) அமைச்சரவைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அனுமதி அளிப்பது தொடர்பாக சுகாதார அமைச்சகத்தின்  ஆய்வு அறிக்கை முடிக்கப்படாததால் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்படவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பிரச்சினை தொடர்பாக இந்தியா உட்பட 34 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் குவைத்துக்கு நேரடியாக நுழைவதற்கு கடந்த சில மாதங்களா தடை விதிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.


இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மீதான தடையை நீக்கி நேரடியாக விமான சேவையை வழங்குவதற்கு குவைத் ஏர்வேஸ் அதிகாரிகள் கடந்த வாரம் சுகாதார அமைச்சகத்திற்கு சில திட்டங்களை சமர்ப்பித்தனர்.குவைத் ஏர்வேஸ் தடை விதித்த நாடுகளில் நோய் பரவும் அளவின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்த வேண்டும் என்றும், நிபந்தனைகளுடன் அந்த நாடுகளின் பயணிகளை குவைத்தில் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.


நோய் அதிகமாக உள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மொத்தம் 3 முறை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் நாட்டிற்கு வந்த பிறகக தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்தபின்னர் குவைத்தில் சாதாரணமாக இயங்க முடியும். நோய்தொற்று குறைவாக உள்ள பிற நாடுகளைச் சேர்ந்த பயணிகள்  2 தடவை  பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் நாட்டிற்கு வந்த பிறகக தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்தபின்னர் குவைத்தில் சாதாரணமாக இயங்க முடியும். 

தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை 7 நாட்களுக்கு மட்டுப்படுத்த(குறைக்க) வேண்டும் என்றும் அந்த முன்மொழிவு பரிந்துரைத்தது. ஒரு ஆய்வு நடத்திய பின்னர் முடிவை அறிவிப்பதாக சுகாதார அமைச்சகம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், சுகாதார அமைச்சகம் இன்னும் ஆய்வை முடிக்கவில்லை. இன்றைய(திங்கட்கிழமை) அமைச்சரவைக் கூட்டத்தில் எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சுகாதார அமைச்சின் ஆய்வு அறிக்கையைப் பெற்ற பின்னர் குவைத் அரசால் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அறியப்படுகிறது.

இன்றோ அல்லது வரும் நாட்களில் குவைத் சுகாதாரத்துறை அனுமதி வழங்கினால் நல்ல செய்தி வெளியாகும் என்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்றுநோக்கி வருகின்றனர்.

Add your comments to குவைத்தில் 34 நாடுகளின் தடை நீக்குவது தொடர்பாக நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எந்த முடிவு எடுக்கப்படவில்லை:

« PREV
NEXT »