குவைத்தின் ஜஹராவிலிருந்து குடிபெயர்ந்த ஒரு கழுகு 3500 கீ.மீ பயணம் செய்து கடந்த வாரம் மீண்டும் குவைத் திரும்பியது:
அக்டோபர்-22,2020
குவைத்தின் ஜஹ்ராவிலிருந்து ஆறு மாதங்களுக்கு முன்பு வேறு கண்டத்திற்கு குடிபெயர்ந்த அழிவை சந்தித்து வரும் ஸ்பாட் வகை புள்ளி கழுகு கடந்த வாரம் மீண்டும் குவைத் திரும்பியது. இந்த கழுகு தெற்கு ரஷ்யா மற்றும் கஜகஸ்தானில் உள்ளிட்ட நாடுகளில் வசந்தகாலத்தை அனுபவித்த பின்பு 3,500 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து மீண்டும் பறந்து குவைத் திரும்பியது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலைவன பகுதியான ஜஹராவில் இயற்கை சுற்றுசூழல் துறையால் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலய பகுதி உள்ளது, இங்கு 3 புள்ளி கழுகுகள் உள்ளது. இவைகள் கடந்த மார்ச் 30 ஆம் தேதி நாட்டிற்கு வசந்த காலத்தை அனுபவிக்க பறந்து சென்றது. சிறப்பு கண்காணிப்பு உபகரணங்கள் மூலம் அவைகள் பறந்து செல்லும் பாதை கண்காணிக்கப்பட்டது.
குவைத் அறிவியல் முன்னேற்றம் அமைப்பு,குவைத் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு மற்றும் குவைத் சுற்றுச்சூழல் லென்ஸ் குழு போன்ற அரசு அமைப்புகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளால் இதன் பாதைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இவை கண்காணிக்கப்பட்டன.
இந்த மூன்று கழுகும் குவைத்தை விட்டு வெளியேறியதில் இருந்து தெற்கு ரஷ்யா மற்றும் கஜகஸ்தானில் இவைகள் வசந்த காலத்தை கழித்ததை கண்காணிப்பு அமைப்பு தொடர்ந்து கண்காணிப்பு செய்து வந்தது. திரும்பி வரும் வழியில் ஈரானில் வைத்து ஒரு கழுகு மின்கம்பத்தில் மோதி இறந்தது. இரண்டாவது கழுகு வழிதவறி ஏமன் நாட்டை நோக்கி பறந்தது சென்றது, மூன்றாவது கழுகு இப்போது மீண்டும் குவைத்தில் வந்துள்ளது.
இந்த மாதம் 15-ஆம் தேதி ஜஹ்ராவின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் மீண்டும் அந்த கழுகு தென்பட்டது என்று சுற்றுச்சூழல் லென்ஸ் அணியின் உறுப்பினர் பொறியாளர் ஒமர் அல் சயீத் தெரிவித்தார். இந்த திட்டம் வெற்றிகரமாக இருந்தது மற்றும் இலக்குகள் எட்டப்பட்டுள்ளன என்பதில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் கூறினார். இந்த சம்பவம் குவைத்தின் சுற்றுச்சூழல் வரலாற்றில் முதல் நிகழ்வு என்று அவர் மேலும் கூறினார்.