குவைத்தில் கடந்த 6 மாதங்களில் 818 இந்தியர்கள் பல்வேறு காரணங்களால் மரணமடைந்தனர்:
அக்டோபர்-25,2020
குவைத்தில் கடந்த ஆறு மாதங்களில் 818 இந்தியர்கள் இறந்துள்ளனர். இது இந்திய தூதரகம் இணையதளத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி ஆகும். இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை குவைத்தில் மரணமடைந்த இந்தியர்களின் எண்ணிக்கை இதுவே அதிகம். இதில் முக்கியமாக கடந்த ஆறு மாதங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் குவைத்தில் மரணமடைந்த இந்தியர்கள் எண்ணிக்கையை விடவும் மிக அதிகம்.
சமீபத்திய ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் குவைத்தில் சராசரியாக 450 முதல் 500 இந்தியர்கள் இறந்துள்ளனர். இருப்பினும், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான இறப்புகளின் எண்ணிக்கையைத் தவிர்த்து, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் மட்டும் 818 இந்தியர்கள் இறந்தனர் என்பது அதிர்ச்சியாகவே உள்ளது. இதிலிருந்து இந்த ஆண்டு இந்தியர்களின் இறப்பு விகிதம் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்பதை இது காட்டுகிறது.
கோவிட் காரணமாக குவைத்தில் இதுவரை எத்தனை இந்தியர்கள் இறந்துவிட்டார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. கோவிட் காரணமாக குவைத் சுகாதாரத்துறை நாடு வாரியாக இறப்பவர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதை நிறுத்தியுள்ளதால் இந்த தெளிவின்மை நிலவி வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் இறந்த 359 பேரின் உடல்கள் திருப்பி தாயகம் அனுப்பப்பட்டுள்ளன. 458 பேரின் உடல்கள் குவைத்திலேயே அடக்கம் செய்யப்பட்டன.
இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, மே மாதம் இறந்த 59 பேரில் 50 பேரின் உடல்கள் திருப்பி அனுப்பப்பட்டு 9 பேர் உடல்கள் குவைத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். ஜூன் மாதத்தில் 124 இந்தியர்களும், ஜூலை மாதம் 288 பேரும், ஆகஸ்டில் 172 பேரும், செப்டம்பர் மாதத்தில் 137 பேரும் இறந்தனர் என்று தூதரக புள்ளிவிவரங்கள் கூறுகிறது.
ஜூலை மாதம், விமான போக்குவரத்து தடைபட்டு இறந்தவர்களின் உடல்களை தாயகம் அனுப்புவதற்கு முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சரக்கு விமானங்களில் உடல்கள் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கடந்த 6 மாத காலகட்டத்தில் இறந்தவர்களில் பெரும்பாலோர் கோவிட் பாசிட்டிவ் இதனால் 458 பேரின் உடல்கள் குவைத்தில் அடக்கம் செய்யப்பட்டன. தூதரகத்தின் அறிக்கைப்படி இறந்தவர்களில் பலர் பல ஆண்டுகளாக தாயகம் திரும்பாமல் குவைத்தில் தங்கியிருந்த இந்தியர்கள் ஆவார்கள்.