குவைத் அரசு எந்தவிதமான வேலை விசாவும் 7 மாதங்களாக வழங்காத நிலையில் போலி விசாகள் எமாறதீர்கள்:
அக்டோபர்-2,2020
குவைத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி விசாக்கள் மற்றும் பணம் பறிக்கும் கும்பல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. ஹரியானாவை தளமாகக் கொண்ட ஸ்கைவாக் எச்.ஆர்(Skywalk HR Recruiter)ஆட்சேர்ப்பு நிறுவனம் குவைத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, விசா மோசடி செய்ததாகவும், வேலை தேடுபவர்களிடமிருந்து பணம் பறித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மோசடி வேலையை, பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதன் மூலம் வேலை தேடுபவர்களை குறிவைத்து இந்த கும்பல் ஏமாற்றி வருகின்றனர்.அசல் விசா கிடைத்தால் மட்டுமே பணம் செலுத்துங்கள் என்று கூறி போலியான விசாக்களை வழங்கியதன் மூலம் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹூண்டாய் என்ற நிறுவனத்தின் பெயரில் போலியான விசா 'வழங்கப்படுகிறது. இதில் வேடிக்கையான விசயம் என்னவென்றால் குவைத் அரசு விடுமுறை தினமான அக்டோபர் 24 சனிக்கிழமை விசா வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாதிரியான போலி விசா வழங்குபவர்கள், சில ஆயிரங்களுக்கு ஆசைப்படும் எந்த விபரங்களும் தெரியாத உள்ளூர் டிராவல் ஏஜென்டுகளை பயன்படுத்தி இவ்வாறான மோசடியை செய்து வருகின்றனர்.இது வெளியே தெரிந்து, ஆனால் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மேலும் பல மாநிலங்களில் இதுபோல் தற்போது விசா மோசடி நடைபெற்று வருகிறது. எனவே பணத்தை கொடுத்து ஏமாறாதீர்கள்.
குவைத்தில் அரசு சார்ந்த சந்திப்புகள் உள்ளிட்ட காரணங்களுக்காக முக்கிய பிரமுகர்கள்(பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசு சார்ந்த அதிகாரிகளுக்கு) பயணிக்க வழங்கபடும் சிறப்பு அனுமதி விசாகள் தவிர வேறு எந்த ஒரு வேலை வாய்ப்புகள் மற்றும் Visiting விசாக்களும் கடந்த 7 மாதங்களாக வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் விபரம் தெரியாத மக்களின் அறியாமையை பயன்படுத்தி, வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விரும்புபவர்களை குறி வைத்து இந்த மோசடி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
எங்கள் ktpnews தளத்திற்கும் கடந்த சில வாரங்களில் சில உறவுகள் புதிதாக வழங்கப்பட்ட விசா Copy-களை அனுப்பினர். அவைகள் போலியான விசா என்பது தெரியவந்துள்ளது. சில சொல்கிறார்கள் விசா நம்பர் Check செய்தால் குவைத் அரசு தளத்தில் விசா காட்டுகிறது என்று அது காட்டும் காரணம் இயற்கேனவே நிலுவையில் உள்ள நபர்களின் விசா நம்பர் வைத்து போலியான விசா Copy உங்களுக்கு தந்தால் அந்த தளத்தில் காட்டும். முக்கியமாக குவைத் அரசு தளத்தில் அந்த விசா Active ஆக உள்ளதா என்று மட்டுமே பார்க்க முடியும். யார் பெயரில் யார் Sponsor என்ன வேலை என்பது போன்ற எதுவும் தெரிய முடியாது.
எனவே குவைத்தில் விசா அதிகாரபூர்வமாக வழங்குவதற்கு தொடங்கினாலும் குவைத்தில் வேலைக்கு வரும் யாருக்காவது விசா கொடுத்தால் நீங்கள் செல்லும் கம்பெனியின் A to z முகவரி உள்ளிட்ட அனைத்தும் தகவலும் உள்ள letter bad யில் offer Letter கேளுங்கள் மற்றும் வேலை செல்வது தொடர்பாக சம்பளம் சலுகைகள் வருட விடுமுறை உள்ளிட்டவை அடங்கிய குவைத் அரசின் தொழிலாளர் சட்டத்திற்கு உட்பட்ட ஒப்பந்த கடிதம் கேளுங்கள். இது இரண்டும் கொடுத்தால் பிறகு மட்டுமே விசா பெறுங்கள் இதன் மூலம் 20 % விசா மோசடி தடுக்க முடியும். இதை எல்லாம் கொடுத்தும் போலியான விசா கொடுக்கும் பலே கில்லாடி ஏமாற்று பேர்வழிகள் உள்ளனர் என்பதையும் மறந்து விட வேண்டாம். மேலும் விசா பெற்றால் குவைத்தில் உள்ள உங்கள் நண்பர்கள் யாராவது இருந்தால் வேலைக்கு வரும் கம்பெனி பற்றி தெளிவாக விசாரித்து பாருங்கள். பிறகு நீங்கள் விசா பெற்ற நேரத்தில் அந்த கம்பெனி எதாவது ஆள் எடுப்பு நடத்தியதா அப்படி என்றால் என்ன வேலைக்கு உள்ளிட்டவை விசாரித்து பாருங்கள் இதன் மூலமும் ஓரளவு ஏமாறுவது தவிர்க்கலாம்.
குவைத் இந்திய தூதரகத்தின் புதிய தூதுவர் சிபி ஜார்ஜ் அவர்களிடம் போலியான இடைத்தரகர்கள் மற்றும் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக குவைத்தில் உள்ள பல்வேறு அமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பில் பலர் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கொரோனா பிரச்சினை முடிந்து குவைத் இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் புதிதாக எந்தவொரு வேலை வாய்ப்பு விசாவும் வழங்காது. புதிய விசா வழங்கும் நடவடிக்கைகள் துவங்கினால் அது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகும். எச்சரிக்கை..... ஏமாறாதீர்கள்.....
உங்கள் #Ktpnews