BREAKING NEWS
latest

Friday, October 16, 2020

குவைத் இலங்கை தூதரகம் சற்றுமுன் அந்நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள விஷேட அறிவித்தல்

குவைத் இலங்கை தூதரகம் சற்றுமுன் அந்நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள விஷேட அறிவித்தல்:

குவைத்,அக்-16,2020


நாம் ஏலவே அறியத்தந்தது போன்று குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கு அனுப்ப முடியாமல் தூதரகத்தின் பராமரிப்பில் உள்ள காப்பகத்தில் நீண்ட காலமாக தங்க வைக்கப்பட்டுள்ள 160 க்கும் மேற்பட்ட புலம் பெயர் பெண் தொழிலாளர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை  உறுதி செய்யப்பட்டுள்ளது.  

எனவே மேற்குறித்த காரணத்தை  அடிப்படையாகக் கொண்டும் இடப்பற்றாக்குறையைக் கருத்திற் கொண்டும்  இனி  வரும் நாட்களில் எந்தவொரு புலம் பெயர் பெண் தொழிலாளரும் தூதரக காப்பகத்துக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். 

அதே நேரம் இலங்கை அரசின் தீர்மானத்தின் பிரகாரம் குவைத் இலங்கை தூதரகத்தின் வேலைவாய்ப்புகள் மற்றும் நலன்புரி பிரிவின் பெரும்பாலான   அதிகாரிகளின் சேவைக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.

எனவே மேற்சொல்லப்பட்ட காரணங்களினால்  பணி புரியும் இடங்களில் ஏற்படும் முரண்பாடுகளைத் தொடர்ந்து தனது அனுசரணையாளருக்கு (கபீல்) தெரியாது வீடுகளை விட்டு வெளியேறி தூதரகத்துக்கு வருவதனைத் தவிர்க்குமாறும் 25354633 எனும் தொலைபேசி இலக்கம் வாயிலாக தூதரகத்தை தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை அறியத் தரலாம்  அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக முறைப்பாட்டை மேற்கொண்டு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் உங்களது அனுசரணையாளரிடம்  (கபீலிடம்) தொடர்ந்தும் உங்களுக்கு பணி புரிய விருப்பம் இல்லாத போது , அதனை அனுசரணையாளருக்கு (கபீலுக்கு) தெரியப்படுத்தி , ருமைதியாவில் அமைந்துள்ள மனித வள அதிகார சபையின் கீழ் இயங்கும் “அமாலா மன்ஸில்” ஊடாக குவைத் அரசினால் பராமரிக்கப்படும் தொழிலாளர் காப்பகத்தில் சரணடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேற்குறிப்பிடப்பட்ட முறைகளைப் பின்பற்றாது பணி புரியும் இடங்களிலிருந்து வெளியேறுபவர்கள் தமது இருப்பிடத்தை இழப்பதோடு மீண்டும் தமது அனுசரனையாளரிடமோ (கபீலிடமோ) அல்லது வேலைவாய்ப்பு முகவரிடமோ (ஏஜன்சி) திரும்பிச் செல்ல நேரிடும் அல்லது தனக்கான தங்குமிடத்தைத் தானே  தேடிக் கொள்ள நேரிடும் என்பதனை அறியத்தருகிறோம்.

இலங்கை தூதரகம் – குவைத்

16 ஒக்டோபர் 2020

—————————————————————————

විශේෂ නිවේදනය


අප විසින් මීට ප්‍රථම දැනුම් දුන් පරිදි තානාපති කාර්යාලයේ නිලධාරීන් පිරිසකට සහ තානාපති කාර්යාල යටතේ පවත්වාගෙන යනු ලබන සුරක්ෂා නිවහනේ දීර්ඝ කාලයක් තිස්සේ ශ්‍රී ලංකාවට යාමට නොහැකිව රැදී  සිටින ගෘහ සේවිකාවන් 160 දෙනාගෙන්  බහුතරයකට මේ වන විට නව කොරොනා වෛරසය ආසාදනය වී ඇති බව තහවුරු වී ඇත.

මේ අවස්ථාව වන විට සුරක්ෂා නිවහනේ ඉඩකඩ ප්‍රමාණවත් නොවන බැවින් පැමිණෙන ගෘහ සේවිකාවන් සඳහා නවාතැන් පහසුකම් සැපයීමේ ප්‍රශ්ණයක්ද මතුවී ඇත. මෙම හේතුන් මත මින් ඉදිරියට කිසිඳු ගෘහ සේවිකාවක් සුරක්ෂා නිවහනට භාර නොගැනීමට තීරණය කර ඇත. 

තවද ඔබ දන්නා පරිදි ශ්‍රී ලංකා රජය ගත් තීරණයක් මත කුවේට් තානාපති කාර්යාලයේ රැකියා හා සුභ සාධන අංශයේ නිලධාරීන්  බහුතරයක් සේවය අවසන් කර නැවත ලංකාවට යැවීමට කටයුතු කර ඇත.

එබැවින් තම සේවා ස්ථානවල යම් ගැටළුවක් මතු වුවහොත් හාම්පුතාට හොර රහසේ තානාපති කාර්යාලයට පැමිණීමෙන් වළකින ලෙසත්, 25354633 දුරකථන අංකය ඔස්සේ තානාපති කාර්යාලය අමතා හෝ විදේශ සේවා නියුක්ති කාර්යාංශය හරහා තම පැමිණිල්ල ඉදිරිපත් කර විසඳා ගැනීමට කටයුතු කරන ලෙස දන්වමි.

තවද ඔබ තම හාම්පුතා යටතේ තවදුරටත් සේවය කිරීමට අකමැති නම් හාම්පුතාට ඒ බව දන්වා ඔහු සමඟ රුමතියාහි පිහිටි මිනිස් බල අධිකාරිය යටතේ පවතින “අමාල මනිසිල්” වෙත ගොස් කුවේට් රජය මගින් පවත්වාගෙන යනු ලබන සුරක්ෂා නිවහන වෙත භාරවීමට කටයුතු කරන්න.

එසේ නොකොට සේවා ස්ථානයෙන් බැහැරව පැමිණෙන අයට තම වාසස්ථානයද අහිමි වන අතර නැවතත් තම හාම්පුතාට හෝ විදේශ රැකියා නියෝජිත ආයතනයට භාරදීමට සිදුවනු ඇත.  නැතහොත් තමාට වාසස්ථානයක් සොයා ගැනීමට සිදුවනු ඇත.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය - කුවේට්

16 ඔක්තෝබර් මස 2020



Add your comments to குவைத் இலங்கை தூதரகம் சற்றுமுன் அந்நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள விஷேட அறிவித்தல்

« PREV
NEXT »